IND vs AUS Test Match: சிட்னியில் கொரோனா (COVID-19) வைரஸின் புதிய தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றன. இது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் (Australia vs India, 3rd Test) தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், சிட்னியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வந்தாலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறுவதில், எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் (Cricket Australia) வாரியம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறுபுறம், சிட்னியில் (Sydney) மீண்டும் கொரோனா தொற்று பரவி வருவதால், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ஃபாக்ஸ் கிரிக்கெட்டின் வர்ணனையாளருமான பிரட் லீ (Brett Lee), வடக்கு சிட்னியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்ப முடிவு செய்துள்ளார். போட்டி ஒளிபரப்பு குழுவை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும்  சிட்னியில் உள்ள அவர்களின் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். அதேபோல SEN வர்ணனைக் குழுவை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் அடிலெய்டில் (Adelaide) மைதானத்தில் இருந்து வெளியேறிவிட்டனர். இவர்கள் முதல் டெஸ்டை போட்டியின் வர்ணனையாளராக இருந்தனர். சிட்னியில் வெள்ளிக்கிழமை 28 புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் ஜனவரி 7 முதல் இங்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ |  இந்திய கிரிக்கெட் வீரர் நடராசன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்?


கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இடைக்கால தலைமை நிர்வாகி நிக் ஹாக்லி கூறுகையில், "நாங்கள் எங்கள் மருத்துவ நிபுணர்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம். சீசன் முழுவதும் எங்கள் வீரர்களை Bio Bubble கீழ் வழி நடத்தப்படுகிறார்கள். நாங்கள் நிலைமையைக் கவனித்து வருகிறோம். ஆனால் எந்த பீதியும் இல்லை. "சிட்னியில் நடந்த சோதனை குறித்து ஏதேனும் நிச்சயமற்ற தன்மை இருக்கிறதா என்று கேட்டதற்கு, அவர், "நான் அப்படி நினைக்கவில்லை. இதற்காக, Bio Bubble உருவாக்கியுள்ளோம். மகளிர் பிக் பாஷ் லீக் (Women's Big Bash League), பிக் பாஷ் லீக் (Big Bash League), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி (Australian Cricket Team) அனைத்தும் நெறிமுறையை பின்பற்றியுள்ளன" என்றார்.


மேலும் அவர் கூறுகையில், எங்கள் குழுவில் கொரோனாவுக்கு எதிரான திட்டங்கள் உள்ளன என்று ஹாக்லி கூறினார். அடுத்த மூன்று நாட்கள் முக்கியமானதாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார். "சிட்னியில் பாதுகாப்பாக விளையாட முடிந்தால், நாங்கள் அங்கே விளையாடுவோம்" என்று ஹாக்லி கூறினார். இது எங்கள் தொடக்கப் புள்ளி. மேலும் தொடர்ந்து சுகாதார அதிகாரிகளுடன் நாங்கள் ஆலோசனை செய்து வருகிறோம்' என்றார்.


ALSO READ |  ICC டெஸ்ட் போட்டி தரவரிசையில் இரண்டாவது இடத்தில் விராட் கோலி


இரண்டாவது டெஸ்ட் (Australia vs India, 2nd Test) டிசம்பர் 26 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (Melbourne Cricket Ground) தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது முதல் டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 17) முதல் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய தனது இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒன்பது ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து, 62 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR