இந்திய அணியில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்! பிசிசிஐ அறிவிப்பு!
Duleep Trophy 2024: பங்களாதேஷ் தொடர் நடைபெற உள்ள நிலையில் துலீப் டிராபிக்காண இந்திய அணியில் பிசிசிஐ சில மாற்றங்களை செய்துள்ளது.
வரும் செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கும் துலீப் டிராபியின் இரண்டாவது சுற்றுக்கு முன் ஒவ்வொரு அணியிலும் பிசிசிஐ சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள பங்களாதேஷ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சொந்த காரணங்களுக்காக விலகி இருந்த விராட் கோலி இடம் பெற்றுள்ளார். டி20 உலக கோப்பைக்கு பிறகு ஓய்வில் இருந்த பும்ரா அணியில் இடம் பெற்றுள்ளார்.
மேலும் படிக்க | பங்களாதேஷ் தொடரில் ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாதது ஏன் தெரியுமா?
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இந்திய ஏ கேப்டன் ஷுப்மன் கில், கேஎல் ராகுல், துருவ் ஜூரல், குல்தீப் யாதவ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் யாரும் துலீப் டிராபியின் இரண்டாவது சுற்றில் விளையாட மாட்டார்கள். அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. அதன்படி கில்லுக்குப் பதிலாக பிரதம் சிங் (ரயில்வேஸ்), கேஎல் ராகுலுக்குப் பதிலாக அக்ஷய் வாட்கர் (விதர்பா சிஏ) மற்றும் துருவ் ஜூரலுக்குப் பதிலாக எஸ்கே ரஷீத் (ஆந்திரா சிஏ) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் குல்தீப்பிற்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஸ் முலானி அணியில் இடம் பெற்றுள்ளார், அதே சமயம் ஆகாஷ்தீப்புக்கு பதிலாக ஆகிப் கான் (யுபிசிஏ) அணியில் பெற்றுள்ளார்.
இந்திய A கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்
ஷுப்மன் கில்லுக்கு பதில் இந்திய A அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி புதுப்பிக்கப்பட்ட இந்தியா ஏ அணியில் மயங்க் அகர்வால், ரியான் பராக், திலக் வர்மா, ஷிவம் துபே, தனுஷ் கோட்யான், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, அவேஷ் கான், குமார் குஷாக்ரா, ஷாஸ்வத் ராவத், பிரதம் சிங், அக்ஷய் வாட்கர், எஸ்கே ரஷீத், ஷம்ஸ் முலானி, ஆகிப் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்திய பி அணியில் விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோருக்கு பதிலாக சுயாஷ் பிரபுதேசாய் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரை தேர்வுக் குழு அணியில் எடுத்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக வந்து வீசிய யாஷ் தயாள் முதல்முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சர்பராஸ் கானுக்கு பதிலாக ஹிமான்ஷு மந்திரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மாற்றங்களை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட இந்திய B அணியில் அபிமன்யு ஈஸ்வரன், முஷீர் கான், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, முகேஷ் குமார், ராகுல் சாஹர், ஆர் சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி, என் ஜெகதீசன், சுயாஷ் பிரபுதேசாய், ரிங்கு சிங், ஹிமான்ஷு மந்திரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவின் D அணியில் விளையாடி வந்த அக்சர் படேல் இந்திய அணியில் இணைவதால், அவருக்குப் பதிலாக நிஷாந்த் சிந்து இடம் பெற்றுள்ளார். புதுப்பிக்கப்பட்ட இந்திய D அணியில் ஷ்ரேயாஸ் லியர், அதர்வா டைடே, யாஷ் துபே, தேவ்தத் படிக்கல், ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாகரே, ஹர்ஷித் ராணா, ஆகாஷ் சென்குப்தா, கேஎஸ் பாரத், சவுரப் குமார், சஞ்சு சாம்சன், நிஷாந்த் சிந்து, வித்வத் கவேரப்பா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இரண்டாவது சுற்றுக்கான C அணியில் எந்த மாற்றமும் இல்லை.
மேலும் படிக்க | IND vs BAN: விராட் கோலியால் வாய்ப்பை இழந்த இரண்டு இந்திய அணியின் வீரர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ