இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட்டான துலீப் டிராபி 2024 சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. மற்ற ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு நடைபெறும் இந்த துலீப் டிராபி கூடுதல் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்திய அணியில் உள்ள நட்சத்திர வீரர்கள் பலர் இந்த போட்டியில் நான்கு அணிகளுக்காகவும் விளையாடுகின்றனர். அடுத்த ஆண்டு வரை இந்திய அணி தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டி விளையாட உள்ளதால் இந்த தொடர் அனைத்து வீரர்களுக்கும் உதவியாக இருக்கும். மேலும் இந்திய தேர்வாளர்களுக்கும் புதிய திறமைகளை அணிக்குள் கொண்டு வர உதவிகரமாக இருக்கும். சமீபத்தில் பிசிசிஐ உள்நாட்டில் கிரிக்கெட் விளையாடும் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தியது. இதனால் பல வீரர்கள் பயனடைந்துள்ளனர். துலீப் டிராபியில் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதமான சம்பளம் அவர்களின் அனுபவம் மற்றும் திறமையை வைத்து கொடுக்கப்படுகிறது.
துலீப் டிராபி போட்டிக்கான பரிசுத் தொகை கடந்த ஆண்டு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வெற்றி பெரும் அணிக்கு பரிசுத் தொகை ரூ. 50 லட்சமாக இருந்த நிலையில், தற்போது இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 50 லட்சமும், வெற்றி பெரும் அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தொகை கிடைக்கும். புதிய உள்நாட்டு சம்பள பட்டியலில் படி, தற்போது 41 அல்லது அதற்கு மேற்பட்ட ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடியுள்ள வீரர்களுக்கு ஒரு போட்டியில் விளையாட ரூ.60,000 சம்பளம் வழங்கப்படுகிறது. 21-40 போட்டிகளில் விளையாடியுள்ள வீரர்களுக்கு ஒரு போட்டிக்கு ரூ. 50,000 மற்றும் 20 அல்லது அதற்கும் குறைவான போட்டிகளில் விளையாடியுள்ள வீரர்களுக்கு ரூ.40,000 கொடுக்கப்படுகிறது. மேலும், தற்போது துலீப் டிராபியில் விளையாடும் வீரர்கள், ரஞ்சி டிராபியில் விளையாடும் போது எவ்வளவு சம்பளம் பெற்றார்களோ அதே தொகையை பெறுவார்கள்.
துலீப் டிராபி 2024 அணிகள்
இந்தியா ஏ: ஷுப்மான் கில் (C), மயங்க் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜூரல் (WK), கே.எல். ராகுல், திலக் வர்மா, ஷிவம் துபே, தனுஷ் கோட்டியான், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், கலீல் அகமது, அவேஷ் கான், வித்வத் கவேரப்பா, குமார் குஷாக்ரா , ஷாஸ்வத் ராவத்.
இந்தியா பி: அபிமன்யு ஈஸ்வரன் (C), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (WK), முஷீர் கான், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, யாஷ் தயால், முகேஷ் குமார், ராகுல் சாஹர், ஆர் சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி, என் ஜெகதீசன் (WK)
இந்தியா C: ருதுராஜ் கெய்க்வாட் (C), சாய் சுதர்சன், ரஜத் படிதார், அபிஷேக் போரல் (WK), பி இந்திரஜித், ஹிருத்திக் ஷோக்கீன், மானவ் சுதர், கௌரவ் யாதவ், வைஷாக் விஜய்குமார், அன்ஷுல் கம்போஜ், ஹிமான்ஷு சவுகான், மயங்க் மார்கண்டே, ஆர்யன் ஜூயல் (WK) , சந்தீப் வாரியர்
இந்தியா D: ஷ்ரேயாஸ் லியர் (C), அதர்வா டைடே, யாஷ் துபே, தேவ்தத் பாடிக்கல், ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாகரே, ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சென்குப்தா, கேஎஸ் பரத் (WK), சௌரப் , சஞ்சு சாம்சன் (WK)
மேலும் படிக்க | இந்த காரணங்களுக்காக ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி தக்க வைக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ