ஐதராபாத்: வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்க் செய்த இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில்,  90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. கேப்டன் விராட்கோலி 141 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 111 ரன்னும், ரஹானே 60 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 45 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.


இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. விராட் கோலி தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஹானே 82 ரன்களில் ஆட்டமிழந்த போதும், விராட் கோலி சீரான ஆட்டத்தால் இந்தியா அணி ரன்கள் குவித்தது. உணவு இடை வேளையின் போது 191 ரன்களுடன் களத்தில் இருந்த விராட் கோலி, உணவு இடைவேளை முடிந்ததும் விராட் கோலி இரட்டை சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து 4 டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.


சிறப்பாக விளையாடிய விராட் கோலி, 204 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணி 143.0 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 577 ரன்கள் குவித்து உள்ளது. சகா 54 ரன்களிலும் ஜடேஜா 6 ரன் எடுத்து விளையாடி வருகின்றனர்.