இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்கும் தருவாயில் உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கவுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மாத இறுதியில் அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் மைதானத்தில் நடைபெறவுள்ள மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள ரசிகர்களை அனுமதிப்பது குறித்து BCCI பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.


புதுப்பித்தலுக்கு உட்பட்ட மோட்டேராவில் உள்ள இந்த மைதானம் சுமார் 1,10,000 ரசிகர்களை உள்ளடக்கக்கூடுயது. ரசிகர்களின் அளவின் திறனைப் பொறுத்தவரை இது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும்.


இந்தியா இங்கிலாந்து (England) இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5 முதல் சென்னையில் நடைபெறும். டெஸ்ட் தொடரில் கலந்துகொள்ள இங்கிலாந்து அணி ஏற்கனவே இந்தியா வந்துவிட்டது.


மத்திய மற்றும் மாநில அரசுகள் லாக்டௌன் விதிமுறைகளை சற்று தளர்த்தியுள்ளன. இதன் காரணமாக சென்னையின் (Chennai) எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலும், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


ஒரு ஊடக அறிக்கையின் படி, மோட்டேரா மைதானத்தின் இருக்கை திறன் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருப்பதால், இதில் 50 சதவீத ரசிகர்களை எளிதில் அனுமதிக்க முடியும். "இருக்கை திறன் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருப்பதால், மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் குஜராத் கிரிக்கெட் ஆணையம் 50 சதவீத பார்வையாளர்களை எளிதில் அனுமதிக்க முடியும். விளையாட்டு அரங்கங்களை 50 சதவீத திறனுடன் இயக்க அரசு அனுமதித்துள்ளது. இதன் அடிப்படையில், அகமதாபாத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு ரசிகர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊடகங்களும் போட்டிகளை எளிதாக கவர் செய்ய முடியும்” என்று BCCI வட்டாரம் தெரிவித்தது.


ALSO READ: IPL 2021 இந்தியாவில் நடைபெறுமா? ரஞ்சி டிராபி நடைபெறாதா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR


பகல் இரவு ஆட்டமாக நடக்க தீர்மானிக்கப்பட்டுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி, புதுப்பிக்கப்பட்ட பிறகு இந்த மைதானத்தில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியாக இருக்கும் என்று அறிக்கை மேலும் தெரிவித்தது. பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு உள்ளிட்ட பல பிரமுகர்களுக்கு போட்டிக்கான அழைப்பை வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.


கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது இந்தியா வந்த தென் ஆப்பிரிக்க அணி ஒரு போட்டியில் கூட ஆடாமல் திரும்பியது. அதன் பிறகு இந்தியா வந்துள்ள முதல் வெளிநாட்டு கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணி என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், இங்கிலாந்து தொடர், சுமார் ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும்.


ALSO READ: T10 League 2021: 26 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து நிக்கோலஸ் பூரன் அபார சாதனை