ICC, Jasprit Bumrah Got Demerit Point in IND vs ENG Test Match: இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாஸ்பால் அணுகுமுறையுடன் முதல்முறையாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை முன்னிலைப்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜஸ்பிரித் பும்ரா - ஒல்லி போப் சர்ச்சை


இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஏறத்தாழ சுமார் 190 ரன்கள் பின்தங்கியிருந்தது. இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் ஒல்லி போப் 196 ரன்களை அடிக்கவும், மற்றும் பந்துவீச்சில் ஹார்ட்லி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு மிகுந்த பங்களிப்பை அளித்தது. இந்திய அணி வெற்றி பெற அதிகம் வாய்ப்பிருந்தாலும், இங்கிலாந்தின் போராட்டம் அதனை தடுத்துவிட்டது எனலாம்.  


ஆட்டநாயகனாக ஒல்லி போப் தேர்வானார். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசியின் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி அவருக்கு கரும்புள்ளியை வழங்கி ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸின் பேட்டிங்கின் போது, 81ஆவது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீசினார், அப்போதுதான் பிரச்னைக்குரிய அந்த சம்பவம் நடந்தது. 


மேலும் படிக்க | இலங்கை மீதான அனைத்து தடைகளையும் நீக்கிய ஐசிசி!



ஐசிசி விதி மீறல்


ஜஸ்பிரித் பும்ரா வீசிய அந்த பந்தை, ஒல்லி போப் அடித்து சிங்கில்ஸ் ஓடினார். ஒல்லி போப் ஓடும் போது, ஜஸ்பிரித் பும்ரா குறுக்கே வந்து, அவருக்கு இடைஞ்சலை ஏற்படுத்தினார். மேலும், வேண்டுமேன்றே ஜஸ்பிரித் பும்ரா அப்படி செய்ததாக கூறி ஐசிசி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இது லெவல் 1 மீறலாகக் கருதி, ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒரே ஒரு கரும்புள்ளியை மட்டும் ஐசிசி வழங்கியுள்ளது. 


ஒரு சர்வதேச போட்டியின் போது ஒரு வீரர், அணியின் பணியாளர், நடுவர், போட்டி நடுவர் அல்லது பார்வையாளர்கள் உள்பட வேறு எந்த நபருடன பொருத்தமற்ற உடல் தொடர்பு மேற்கொண்டால் அது நடத்தை விதி மீறல் என ஐசிசி விதிகள் தெரிவிக்கிறது. 


இதனால் என்ன பிரச்னை?


மேலும், கடந்த 24 மாதங்களில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இது முதல் விதிமீறல் என்பதால், அடுத்த 24 மாதங்களில் இதுபோன்ற மீறல்கள் ஏதேனும் இருக்கும்பட்சத்தில் அவர் இதுகுறித்து கவலைகொள்ள நேரிடும். அடுத்து கரும்புள்ளிகள் வாங்கினால் வீரர் தடை கூட செய்யப்படலாம்.


இரண்டு சஸ்பென்ஷன் புள்ளிகள் என்பது ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகள், அல்லது இரண்டு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுபவர்களுக்கு எது முதலில் வருகிறதோ அந்தந்த போட்டிகளுக்கு தடை விதிக்கப்படும். 


ஜஸ்பிரித் பும்ரா இந்த கரும்புள்ளி நடவடிக்கைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது. ஜஸ்பிரித் பும்ரா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் ஆட்ட நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் முன்மொழிந்த நடவடிகையை ஜஸ்பிரித் பும்ரா ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | யார் இந்த ஹார்ட்லி...? இந்தியாவுக்கு ஆப்பு வைக்க இங்கிலாந்து இவரை எப்படி கண்டுபிடித்தது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ