IND vs PAK: கடுப்பில் திட்டிய பாண்டியா... அப்செட் ஆன ரோகித் - என்ன நடந்தது?
இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே பரபரப்புகள் நிறைந்திருக்கும் நிலையில், இப்போட்டியில் பரபரப்பான நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் நேற்று தொடங்கின. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். குறிப்பாக, இந்திய அணி 4 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்கள் என 6 பௌலர்கள் உடன் களமிறங்கியது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. இஃப்திகார் அகமது, ஷான் மசூத் ஆகியோர் அரைசதம் அடித்த நிலையில், இந்திய பந்துவீச்சு தரப்பில் ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
மேலும் படிக்க | IND vs PAK: பழி தீர்க்குமா இந்தியா... 160 ரன்கள் இலக்கு!
தற்போது, இந்தியா பேட்டிங் செய்துவரும் நிலையில், இந்திய பந்துவீச்சின்போது ரசிகர்களை மட்டுமின்றி வீரர்களையும் கடுப்பாக்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதாவது, ரவிச்சந்திரன் அஸ்வின் 15ஆவது ஓவரை வீசி வந்தார்.
அப்போது, ஷான் மசூத் அவரின் நான்காவது பந்தை எதிர்கொண்டார். அவர் அந்த பந்தை மடக்கி அடிக்க முயற்சி செய்ய, பேட் முனையில் பட்டு பந்து மேலே சென்றது. அதை ஹர்திக் பாண்டியா கேட்ச் பிடிக்க ஓடிவந்த நிலையில், மைதானத்தில் இருந்த ஸ்பைடர் கேமராவில் பந்துபட்டு அப்படியே விழுந்துவிட்டது. இதனால், மசூதின் விக்கெட்டை வீழ்த்தும் எளிய வாய்ப்பு கை நழுவி போனது.
தொடர்ந்து, விதிப்படி அந்த பந்து டெட் பாலாக அறிவிக்கப்பட்டு, ரன்னும் பந்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால், ரசிகர்கள் மட்டுமின்றி களத்தில் இருந்த வீரர்களும் கடும் அதிருப்தியடைந்தனர்.
கேப்டன் ரோஹித் சர்மா கள நடுவர்களிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும், எளிமையான கேட்ச் பறிபோன விரக்தியில் ஹர்திக் பாண்டியா அந்த வானில் இருந்த ஸ்பைடர் கேமராவை நோக்கி சத்தம் போட்டு திட்டினார். குறிப்பாக, மசூத் கடைசி வரை விக்கெட்டை இழக்காமல் 52 ரன்களை குவித்தார். இந்த சம்பவத்தின் போது அவர் 31 ரன்களை எடுத்திருந்தார்.
தற்போது, பேட்டிங் செய்து வரும் இந்திய அணி பவர்பிளே முடிவில், 8 ஓவர்கள் முடிவில் 38 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ