இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமாவுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், கேசவ் மகராஜ் கேப்டன் பொறுப்பை ஏற்றார். தொடர்ந்து, பவுமா, ஷம்ஸி ஆகியோருக்கு பதில் ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஜோர்ன் ஃபார்டுயின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணி சார்பில் ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய் ஆகியோருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணி 279 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக மார்க்ரம் 79 ரன்களை எடுத்தார். இந்திய பந்துவீச்சில் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 


மேலும் படிக்க | Video: வெறுங்கையிலயா டாஸ் போட... காசை கொடுங்கப்பா - ஷிகர் தவானின் கலகல சம்பவம்



தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான், சுப்மன் கில் சுமாரான தொடக்கத்தை அளித்தனர். ஷிகர் தவான் 13 ரன்களிலும், சுப்மன் கில் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதற்கடுத்து, ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் - ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் தென்னாப்பிரிக்காவை திணறிடித்தனர். இருவரும் அரைசதம் அடித்த மிரட்டினர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 161 ரன்களை குவித்தனர். இஷான் கிஷான் 93 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜோர்ன் ஃபார்டுயின் பந்துவீச்சில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். 


கிஷான் ஆட்டமிழந்தாலும் மறுமுனையில், தொடர்ந்து அதிரடியாக ஆடினார், ஷ்ரேயஸ். சாம்சனும் அவருக்கு கைக்கொடுக்க, ஷ்ரேயஸ் தனது இரண்டாவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். மேலும், 45.5 ஓவரிலேயே இந்த ஜோடி இலக்கை அடைந்து, இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தது. ஷ்ரேயஸ் 113 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 



தென்னாப்பிரிக்கா சார்பில் ஜோர்ன் ஃபார்டுயின், பார்னல், ரபாடா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். முன்னதாக, முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றிருந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் தொடர் சமன்நிலை ஆகியுள்ளது. தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை மறுநாள் (அக். 11) நடைபெற இருக்கிறது.   


மேலும் படிக்க | கோடிக்கணக்கில் ஐபிஎல் சம்பளம்! ஆனாலும் உலக கோப்பையில் இடம் இல்லை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ