துபாய்: இந்தியா அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு மற்ற அணிகளின் செயல்திறனைப் பொறுத்தது என்பதால், டி20 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்திற்கு எதிரான மற்றொரு 'டூ ஆர் டை' (Do or Die Match) போட்டியில் இந்திய அணி இன்று (வெள்ளிக்கிழமை) மோதும் போட்டியில் அபாரமான வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். முந்தைய போட்டியில் ஆப்கானிஸ்தானை 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பிறகு, இந்தியா அதே வேகத்தில் இன்றும் செயல்பட வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா வெறும் ஒரு வெற்றியைப் பதிவு செய்வது மட்டுமல்லாமல், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நிகர ரன்-ரேட்டை உயர்த்த வேண்டும். அப்பொழுது தான் அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு தக்க வைத்துக்கொள்ள முடியும்.


பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு ஆட்டங்களில் மோசமான தோல்வியால் இந்தியாவின் ரன் ரேட்டும் (Run Rate) குறைந்து விட்டது. இப்போது இந்தியாவுக்கு ஒவ்வொரு போட்டியும் செய் அல்லது செத்து மடி என்ற நிலை இருக்கிறது. இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் தொடர்ந்து நான்கு வெற்றிகளுடன் அரையிறுதிக்கு (Pakistan - Semi Finals)  முன்னேறியுள்ளது. அடுத்து நியூசிலாந்தும் அரையிறுதியை அடைய வாய்ப்புள்ளது. நியூசிலாந்து நமீபியா அல்லது ஆப்கானிஸ்தானிடம் தோற்றால், இந்தியா அரையிறுதிக்கு செல்லும் நம்பிக்கை தொடர்ந்து தக்க வைக்க முடியும்.


ALSO READ |  விராட் கோலியுடன் அரட்டையடிக்க விரும்பும் ஸ்காட்லாந்து கிரிக்கெட்டர்கள்


இத்தகைய சூழ்நிலையில், விராட் கோலி (Virat Kohli) தலைமையிலான இந்திய அணியின் கண்கள் ஸ்காட்லாந்தை அபாரமான வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்த இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டனர். மூன்றாவது இடத்தில் களமிறங்குவதற்கான சர்ச்சைக்குரிய முடிவிற்குப் பிறகு, ரோஹித் சர்மா (Rohit Sharma) மீண்டும் தொடக்க வீரராக களம் இறங்கினார். மேலும் அவர் ஒரு அற்புதமான அரை சதத்தை அடித்து தனது பர்பாமன்ஸ்-ஐ வெளிப்படுத்தினார்.


முதல் இரண்டு போட்டிகளில் சில முடிவுகள் தவறாக நடந்ததை போட்டிக்குப் பிறகு ஒப்புக்கொண்ட ரோஹித், தொடர்ந்து கிரிக்கெட் விளையாடியதால் ஏற்பட்ட மனச் சோர்வுதான் காரணம் என்றார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோஹித், கே.எல்.ராகுல் (KL Rahul), ரிஷப் பந்த் (Rishabh Pant), ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) ஆகியோர் நன்றாக ஆடினார்கள். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெளியேறி அணிக்கு திரும்பிய சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) வருகையால் பேட்டிங் வலுப்பெற்றுள்ளது. அவரைத் தவிர, ரவீந்திர ஜடேஜாவும் (Ravindra Jadeja) கீழ் வரிசையில் தனது நம்பிக்கையை நிரூபிக்கிறார்.


ALSO READ |  ஆப்கானிஸ்தானுக்கு ஆப்பு வைத்த இந்திய அணியின் இந்த 5 முக்கிய ஹீரோக்கள்


பந்துவீச்சில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டி20 போட்டியில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin), நான்கு ஓவர்களில் 14 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரை வெளியேற்றும் முடிவு விமர்சனத்திற்கு உள்ளானதை அடுத்து அவருக்கு இறுதியாக விளையாடும் லெவன் அணியில் இடம் வழங்கப்பட்டது. 


போட்டிக்கு பிறகு கேப்டன் விராட் கோலி கூறுகையில், 'அஸ்வினின் மறுபிரவேசம் மிகவும் சாதகமாக இருந்தது. இதற்காக கடுமையாக உழைத்துள்ளார். இந்த கட்டுப்பாட்டையும், ரிதத்தையும் ஐபிஎல் போட்டியிலும் காட்டினார். அவர் புத்திசாலி மற்றும் விக்கெட் வீழ்த்துபவர்' என்றார்.


சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்திக்கு (Varun Chakraborty) ஏற்பட்ட காயம் காரணமாக அஸ்வின் மீண்டும் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்பட்டார். முகமது ஷமி (Mohammed Shami) மற்றும் ஜஸ்பிரித் பும்ராவும் (Jasprit Bumrah) சிறப்பாக பந்து வீசினர்.


ALSO READ |  ராகுல் டிராவிட் நியமனம் குறித்து மவுனம் கலைத்த ரோஹித் சர்மா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR