ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 கட்டத்தில் ஸ்காட்லாந்து அணி, நெருக்கடியான நிலையில் இருக்கலாம். ஆனால் உலக கிரிக்கெட்டில் பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடுவதன் மூலம் தங்கள் அணியினர் இயன்றவரை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேப்டன் கைல் கோட்சர் விரும்புகிறார்.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு முன்னதாக, ANI இடம் பேசிய ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் கோட்சர், தனது அணியினர், இந்தியாவிற்கு எதிராக கடினமாக விளையாட வேண்டும் என்று தான் விரும்புவதாகவும், பெரிய போட்டிகளில் எப்படி விளையாடுவது என்பதை இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.
விளையாட்டு முடிந்ததும் ஸ்காட்லாந்து டிரஸ்ஸிங் அறைக்குள் விராட் கோஹ்லி போன்ற கிரிக்கெட்டர்கள் தங்களது டிரெஸ்ஸிங் அறைக்குக்ள் வந்து தனது வீரர்களுடன் அரட்டையடிக்க வேண்டும் என்று விரும்புவதாக கோட்சர் கூறினார்.
"அவர்கள் விளையாட்டின் சிறந்த தூதர்கள். எங்கள் அணியினர் அவர்களுடன் பேச வேண்டும், அது கோஹ்லி, வில்லியம்சன், ரஷித் கான் என யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களுடன் விளையாடுவதுதான் கற்றுக்கொள்வதற்கான ஒரே மற்றும் சிறந்த வழி" என்று தெரிவித்தார்.
Also Read | ஆப்கானிஸ்தானுக்கு ஆப்பு வைத்த இந்திய அணியின் இந்த 5 முக்கிய ஹீரோக்கள்
"அணி ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் கற்றுக் கொள்ளும். இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடுவது மிகவும் புத்திசாலித்தனமானது. விளையாட்டில் மேல் மட்டத்தில் உள்ள சிறந்தவர்களுக்கு எதிராக விளையாடுவது ஒரு நல்ல அனுபவம். கிரிக்கெட் அனுபவங்கள் மட்டுமல்ல, இன்னும் நிறைய வாழ்க்கை அனுபவங்களை கற்றுக் கொள்ள முடியும். நாங்கள் உலகில் 12வது இடத்தில் இருக்கிறோம்" என்று கூறினார்.
டாஸ்ஸில் விராட் அருகில் நிற்பது எனக்கு மட்டுமின்றி எவருக்கும் சிறப்பான நிகழ்வாக இருக்கும். அவருடைய விளையாட்டு உத்தியும் ஸ்கோர் செய்யும் ஸ்டைலான முறையும் அனைவரையும் கவர்கிறது. அவருடன் உரையாட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று ஸ்காட்லாந்து கேப்டன் கூறினார்.
கொரோனா காலத்தில் கிரிக்கெட்டர்கள் பபுள் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும்போது, அவர்களின் வாழ்க்கை எளிதானது அல்ல என்றாலும், கற்பதற்கான வாய்ப்பு இதை விட வேறு எப்போதும் கிடைக்காது என்று ஸ்காட்லாந்து கேப்டன் கூறுகிறார். இந்த பயணத்தில் பல ஆக்கப்பூர்வமான விஷயங்களை தங்கள் அணியினர் கற்றுக் கொள்வார்கள் என்று ஸ்காட்லாந்து கேப்டன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
Read Also | 66 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR