இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டை இழந்து 487 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்தது. முதல் நாளில் அதிகபட்சமாக ஷிகர் தவன் 119 ரன்களும், ராகுல் 85 ரன்களும் எடுத்தனர். இரண்டாவது நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்தியா அணி சிறப்பாக விளையாடியது. குறிப்பாக ஹார்திக் பாண்டியாவின் அதிரடியால் ரன்கள் மளமளவென உயர்ந்தது. அவர் 96 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதில் 7 சிச்சரும், 8 பவுண்டரியும் அடங்கும். உமேஷ் யாதவ் 3(14) அவுட் ஆகாமல் இருந்தார்.


இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 487 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் லக்ஷன் சந்தானன் 5 விக்கெட்டும், மாலிண்டா புஷ்பகுமார 3 விக்கெட்டும், விஷவா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் எடுத்தனர். 


 



 


அடுத்து தனது முதல் இன்னிங்ச்சை விளையாடிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிமுத் கருணாரட்னே 4(15), உபுல் தரங்க 5(5) சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்த இரண்டு விக்கெட்டையும் முகம்மது ஷமி வீழ்த்தினார். அடுத்த வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஆனால் இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் நிதானமாக விளையாடி அந்த அணியில் அதிகபட்சமாக 48(87) ரன்கள் எடுத்தார். 


இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட 352 ரன்கள் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இலங்கை தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது.


இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், முகம்மது ஷாமி மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்டும், ஹார்திக் பாண்டியா 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.