இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 6 வார கால சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்பயணத்தில், முன்னதாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டிகளில் இந்தியா 1-0 என்று கணக்கில் வெற்றிப் பெற்று தொடரை வென்றது. 
பின்னர் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் கடந்த டிச.,10 அன்று இமாச்சல்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் துவங்கியது.


இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் கோலி ஓய்வில் இருந்ததால் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா இலங்கை அணியை எதிர்த்து படுதோல்வி அடைந்தது.


இந்நிலையில் நாளை இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது முதல்நாள் போட்டி, பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான பயிற்சியில் இருஅணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்