மேற்கிந்தியா அணிக்கு எதிரான மூன்றாவது 'டி20' போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட், ஒருநாள் தொடர்களை இந்தியா வெற்றியுடன் முடித்துள்ள நிலையில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாது. இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் அபாரமாக வென்ற இந்திய தொடரை கைப்பற்றியுள்ளது. 


இந்நிலையில் இந்தியா - மேற்கிந்திய அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில்  'டாஸ்' வென்ற மேற்கிந்திய அணி கேப்டன் பிராத்வைட் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் குல்தீப், பும்ராவுக்கு ஓய்வு தரப்பட்டதால் சகால், வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்தனர். 


தொடக்க ஆட்டக்காரர்களாக ஷாய் ஹோப்பும், ஷிம்ரோன் ஹெட்மையரும் களமிறங்கினர். அதிரடியாக ஆடி வந்த மேற்கிந்திய அணி 6 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ரன்களை எடுத்தது.


இந்த அதிரடி ஜோடியை சுழல்பந்து வீச்சாளர் சாஹல் பிரித்தார். முதலில் ஷாய் ஹோப்பை 24 ரன்னிலும், ஹெட்மையரை 26 ரன்னிலும் அவுட்டாக்கினார். அடுத்து இறங்கிய டேவன் பிராவோ பொறுப்புடன் ஆடினார். ராம்தின் 15 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் சிக்கி வெளியேறினார்.


அடுத்து ஆடிய நிகோலஸ் பூரன் பிராவோவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடக்கத்தில் நிதானமாக ஆடினர். அதன்பின்னர் அதிரடியை தொடர்ந்தனர். நிகோலஸ் பூரன் 4 சிக்சர்கள் அடித்து ஆட்டத்தின் அவரது அணியின் ரன்கள் உயர வழிவகுத்தார். இந்த ஜோடி 27 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தது.


இறுதியில், மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணி களமிறங்கியது. 


கேப்டன் ரோஹித் சர்மா, 4 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த லோகேஷ் ராகுல், 17 ரன்களில் வெளியேற இந்திய அணி தடுமாறத் தொடங்கியது. இதையடுத்து இணைந்து ஷிகர் தவான், ரிஷிப் பந்த் இணை, அதிரடியாக விளையாடி ரன்களை சேகரித்தனர். 58 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து 92 ரன்கள் எடுத்தபோது ஷிகர் தவான் பெவிலியன் திரும்பினார். 


இறுதியில் இந்திய அணி வெற்றி பெற, 1 பந்தில் 1 ரன் எடுக்க வேண்டும், என்ற நிலை ஏற்பட்டது. வெற்றிக்கான அந்த ரன்னை மணிஷ் பாண்டே எடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ஷிகர் தவானுக்கும், தொடர் நாயகன் விருது குல்தீப் யாதவுக்கும் அளிக்கப்பட்டது.