இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நாளை தொடங்குகிறது. இந்திய அணிக்கு இது 1000-வது ஒருநாள் போட்டி. ரோகித்சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடப்போகும் முதல் ஒருநாள் போட்டி. தென்னாப்பிரிக்கா தொடரில் தோல்வியுடன் திரும்பிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக தொடங்குவது இந்திய அணியின் இலக்காக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் திடீர் ராஜினாமா!


போட்டி குறித்து செய்தியாளர்களை சந்தித்த ரோகித்சர்மா, விராட் கோலி விட்ட இடத்தில் இருந்து அணியை மேலும் முன்னோக்கி எடுத்துச் செல்வேன் எனத் தெரிவித்தார். அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது எனக் கூறிய அவர், வீரர்கள் அவர்களுடைய பொறுப்பை உணர்ந்து விளையாட விளையாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். குல்தீப் - சாஹல் கூட்டணி மீண்டும் அணிக்குள் கொண்டு வரும் திட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளார். 


ALSO READ | புதிய விதிமுறைக்கு எதிராக சச்சின் போர்க்குரல்..!


டெஸ்ட் கேப்டன் யார்? நியமிக்கப்படுவார்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த ரோகித் சர்மா, இது குறித்து முடிவெடுப்பதற்கு போதுமான காலம் இருப்பதாக கூறியுள்ளார். இப்போது முழுமையாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கவனம் செலுத்துவதாகவும், பணிச்சுமையை கணக்கில் கொண்டு தேர்வுக்குழுவினர் முடிவெடுப்பார்கள் எனத் தெரிவித்தார். புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அந்த முடிவுகள் இருக்கும் என்றும் சூசகமாக தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR