IND vs WI இங்கிலாந்தில் டி20 மற்றும் ஒருநாள் தொடரை வென்ற பிறகு இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இன்று (ஜூலை 22) டிரினிடாட், போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டியுடன் சுற்றுப்பயணம் தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது, ​​ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது.  அணியில் மூத்த வீரர்கள் இல்லாததால், ஷுப்மான் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



மேலும் படிக்க | வெஸ்ட் இண்டீஸ் செல்ல இந்திய அணி செலவிட்ட தொகை இத்தனை கோடியா! Chartered flight யை செலக்ட் செய்தது ஏன்?


தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் போன்றோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.  ஆல்-ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில் ஷர்துல் தாக்கூர் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக  தேர்வாக இருக்கிறார்.  வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டரை அணிக்கு திரும்ப அழைத்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.  


இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் முதல் ஒருநாள் போட்டியை எப்படி பார்ப்பது?


வெஸ்ட் இண்டீஸ் 2022-ன் இந்திய சுற்றுப்பயணத்தின் அதிகாரப்பூர்வ பிரத்யேக ஒளிபரப்பு ஃபேன் கோட் (Fan Code) ஆகும். போட்டியின் லைவ் ஸ்ட்ரீமிங் ஃபேன் கோட் ஆப் மூலம் வழங்கப்படும். மேலும் DD Sports-ல் நேரடியாக ஒளிபரப்பப்படும்.  இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு நடைபெறுகிறது.


ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி: ஷிகர் தவான் (C), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, சிராஜ், அர்ஷ்தீப் சிங்


மேலும் படிக்க | 9 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த அணியுடன் விளையாடும் விராட் கோலி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ