உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக தமிழக வீரர் விஜய்சங்கர் விலகினார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட போது விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் என இரண்டு தமிழக வீரர்கள் அணியில் இடம் பெற்றது குறித்த மகிழ்ச்சிக் குரல்கள் எழுந்தன. தினேஷ் கார்த்திக்கிற்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், விஜய் சங்கர் சில போட்டிகளில் விளையாண்டார்.


இதுவரை 3 போட்டிகளில் விஜய் சங்கர் விளையாடி இருந்தார்,  58 ரன்களை எடுத்ததுடன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில், எதிர்பாராதவிதமாக வலைப்பயிற்சியின் போது காலில் ஏற்பட்ட காயம் குணமடையாத காரணத்தால் அவர் கடந்த போட்டியில் விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷப் பண்ட் பங்கேற்றார். 



எதிர்பாராதவிதமாக பயிற்சியின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விஜய் சங்கர் உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். விஜய் சங்கருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகக் கோப்பை தொடரில் காயம் காரணமாக ஷிகர் தவானை தொடர்ந்து விஜய் சங்கர் விலகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.