வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைப்பெற்றது.


இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்து விளையாடியது. துவக்கம் முதலே இந்திய வீரர்களின் பந்துவீச்சில் திணறிய வங்கதேசம் ஆட்டத்தின் 58.3-வது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே குவித்தது.


அணியில் அதிகப்பட்சமாக முஷபிர் ரஹிம் 43(105) ரன்கள் குவித்தார். இவருக்கு அடுத்த நிலையில் மொஹினுள் ஹாக்யூ 37(80) ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் மொகமது ஷமி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அஷ்வின், இஷான்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 


இதனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்தியா தற்போது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. என்றபோதிலும் ஆட்டத்தின் 7.2-வது பந்தில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 6(14) ரன்களுக்கு வெளியேறினார். இவரைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் அதிரடியாக விளையாடி 243(330) ரன்கள் குவித்தார். ரஹானே 86(172) ரன்கள் குவித்தார். அதேப்போல் ரவிந்திர ஜடேஜா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 60*(75) ரன்களுடன் களத்தில் இருந்தார்.


இதனைத்தொடர்ந்து ஆட்டத்தின் 114 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்தது. இதனையடுத்து ஆட்டத்தை டிக்ளர் செய்துக்கொள்வதாக அறிவித்தது. இதைனைத்தொடர்ந்து இரண்டவாது இன்னிங்ஸை துவங்கிய வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற துவங்கினர்.


ஆட்டத்தின் 69.2-வது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி 213 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. அணியில் அதிகப்பட்சமாக ரஹிம் 64(150) ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் மொஹமது சமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இதனையடுத்து இந்தியா 1 இன்னிங்ஸ் மற்றும் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.