Ind vs SL T20: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி
இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
தர்மசாலா: இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி இந்தியாவுக்கு 186 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் மோசமாக இருந்தது.
மேலும் படிக்க | இந்திய அணியில் காத்திருக்கும் மிகப்பெரிய மாற்றம் - ரோகித் முடிவு
ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் சிறப்பான இன்னிங்ஸின் பலத்தால், இந்தியா இந்த போட்டியில் 17 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் வெற்றி பெற்றது.
கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக அனைத்து யுக்திகளையும் கையில் எடுத்தார். இன்றைய போட்டியில் அணியில் சில பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டது.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 1 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து இஷான் கிஷான் 16 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், சஞ்சு சாம்சன் - ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி, இந்தியாவின் ஸ்கோரை 100 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றது
ஸ்ரேயாஸ் 74 ரன்களும், சஞ்சு சாம்சன் 39 ரன்களும் எடுத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர். ஜடேஜா 18 பந்தில் 45 ரன்கள் எடுத்தார்.
மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸூக்கு எதிராக மற்ற ஐபிஎல் அணிகள்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR