கிரிக்கெட் உலகில் வார்னேவின் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவர் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அந்தவகையில், அவர் இந்திய அணிக்கு கண்டெடுத்து கொடுத்துச் சென்ற ஒரு வீரரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலை பகிர்ந்து கொண்டிருப்பவர் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Jadeja 175: கேப்டன் ரோகித்சர்மா மற்றும் ராகுல் டிராவிட் மீது ரசிகர்கள் கடும் விமர்சனம்


வார்னே மறைவு குறித்து அவர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் ஜடேஜாவை 2008 ஆம் ஆண்டே வார்னே அடையாளம் கண்டுபிடித்துவிட்டதாக கூறியுள்ளார். ஹர்ஷா போக்லே உடன் வார்னே உரையாடும்போது, ஜடேஜாவுக்கு மிகப்பெரிய திறமை இருப்பதாகவும், எதிர்காலத்தில் ராக்ஸ்டாராக வருவார் என்றும் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். 



"வார்னே ஜடேஜா மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். ராக்ஸ்டார் என்றும் அழைத்தார். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஜடேஜாவைப் பற்றி நாங்கள் இருவரும் பேசியிருக்கிறோம். ஜடேஜா நீங்கள் 2008 ஆம் ஆண்டு டி ஓய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற உரையாடலை நினைவில் கொள்ளுங்கள்" என ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக வார்னே இருந்தபோது, அவரது தலைமையின் கீழ் ரவீந்திர ஜடேஜா விளையாடியுள்ளார். 


வார்னே மறைவுக்கு அடுத்த நாள் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஜடேஜா, 175 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தார். அன்றைய நாள் போட்டிக்குப் பிறகு ஹர்ஷா போக்லேவின் டிவிட்டுக்கு பதில் அளித்த ஜடேஜா, எனக்கும் நினைவிருக்கிறது ஹர்ஷா பாய் எனத் தெரிவித்துள்ளார். மேலும், "வார்னேவை முதன் முதலில் சந்திக்கும்போது அவர் அவ்வளவு பெரிய பந்துவீச்சாளர் என்றெல்லாம் எனக்கு தெரியாது. அவர் ஏன் என்னை ராக்ஸ்டார் என அழைத்தார்? என்றும் தெரியவில்லை. அவர் என்னை அவ்வாறு அழைத்தபிறகு என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக் கொண்டேன்" என்று ஜடேஜா தெரிவித்துள்ளார் 


மேலும் படிக்க | வார்னே இந்த விஷயத்துக்கு அடிமையாக இருந்தார் - மைக்கேல் கிளார்க்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR