Jadeja 175: கேப்டன் ரோகித்சர்மா மற்றும் ராகுல் டிராவிட் மீது ரசிகர்கள் கடும் விமர்சனம்

ஜடேஜாவுக்கு இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை கொடுக்காமல் இந்திய அணி டிக்ளோர் செய்ததால் கேப்டன் ரோகித் மற்றும் டிராவிட்டை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 5, 2022, 05:18 PM IST
  • இந்திய அணி 574 ரன்களுக்கு டிக்ளோர்
  • ஜடேஜா சிறப்பாக விளையாடி 175 ரன்கள் எடுத்திருந்தார்
  • கேப்டன் ரோகித் மற்றும் டிராவிட் மீது ரசிகர்கள் கோபம்
Jadeja 175: கேப்டன் ரோகித்சர்மா மற்றும் ராகுல் டிராவிட் மீது ரசிகர்கள் கடும் விமர்சனம் title=

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இந்திய டெஸ்ட் அணிக்கு ரோகித் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு விளையாடும் முதல் டெஸ்ட் இதுவாகும். முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இது 100வது டெஸ்ட்போட்டி. இதனால், இப்போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நோக்கில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான இடைவெளியில் அவுட்டாகி வெளியேறினர்.

மேலும் படிக்க | IPL2022: சிஎஸ்கே-வில் இருந்து வெளியேறப்போகும் மற்றொரு வீரர்

மயங்க் அகர்வால் 33 ரன்களுக்கும், ரோகித் சர்மா 29 ரன்களுக்கும் அவுட்டாகினர். 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய கோலி 45 ரன்கள் எடுத்தார். ஹனுமா விஹாரி பொறுப்புடன் விளையாடி 58 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அதரடியாக விளையாடிய ரிஷப் பன்ட் 96 ரன்களில் அவுட்டாகி, மீண்டும் ஒருமுறை சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். ஸ்ரேயாஸ் 27 ரன்களுக்கு அவுட்டாக, நங்கூரம் போல் நிலைத்துநின்று அபாரமாக விளையாடிய ஜடேஜா 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கமால் இருந்தார்.  

மறுமுனையில் அஸ்வின் 61 ரன்கள் எடுத்து அவுட்டாக, முகமது ஷமி 20 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். ஜடேஜா 200 ரன்கள் அடிப்பார் என எதிபார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா திடீரென டிக்ளோர் செய்வதாக அறிவித்தார். 

அப்போது இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்திருந்தது. இது ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஜடேஜா இன்னும் 25 ரன்கள் எடுக்கும் வரை காத்திருக்க முடியாதா? என கொதித்தெழுந்துள்ள ரசிகர்கள், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் டிராவிட்டை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | வார்னே இந்த விஷயத்துக்கு அடிமையாக இருந்தார் - மைக்கேல் கிளார்க்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News