தென்னாபிரிக்காவில் வரலாற்றை மாற்றி எழுதுமா இந்திய அணி?
இந்திய - தென்னாபிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ம் தேதி தொடங்குகிறது.
இதுவரை 7 முறை தென்னாபிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இதுவரை ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வெல்லவில்லை. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் இந்தியா தனது முதல் டெஸ்ட் தொடரை வெல்வதற்கு இந்த தொடர் வாய்ப்பாக இருக்கும் என்று புஜாரா கூறியுள்ளார். இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் இதனை சாத்தியபடுத்த உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
ALSO READ | ரஹானேவுக்கு ’செக்’ வைத்த கே.எல்.ராகுல்..!
நாங்கள் வெளிநாட்டில் விளையாடிய போதெல்லாம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணியினருக்கு கடுமையான நெருக்கடிகளை கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர்களில் சிறப்பாக பந்துவீசியுள்ளனர். அதேபோல் தென்னாப்பிரிக்காவிலும் நடக்கும் என்று நான் நம்புகிறேன், எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் எங்கள் பலம். தற்போது இந்தியாவுக்கு சாதகமாக செயல்படக்கூடிய மற்றொரு விஷயம் என்னவென்றால், அணியில் உள்ள வீரர்கள் பலர் சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். நவம்பர், டிசம்பர் மாதத்தில் நியூசிலாந்திற்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடியது. அதே நேரத்தில் ஹனுமா விஹாரி மற்றும் பிரியங்க் பஞ்சால் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்தியா A அணி சுற்றுப்பயணத்தில் விளையாடி உள்ளனர்.
முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் நாட்கள் உள்ளன. எனவே, நாங்கள் தயாராவதற்கு போதுமான நேரம் உள்ளது. இந்தத் தொடரை எதிர்நோக்கி தென்னாப்பிரிக்காவில் எங்களது முதல் தொடரை வெல்வதற்கு தயாராக உள்ளோம். தற்போது உள்ள பயோ-பபிள் கடினமாக இருந்தாலும், இது வீரர்களுடன் அதிக நேரம் ஒன்றாகச் செலவழிக்க உதவுகிறது என்று புஜாரா கூறினார். தென்னாப்பிரிக்காவிற்கு இந்தியா விளையாடும் 8வது டெஸ்ட் சுற்றுப்பயணம் இதுவாகும். வரும் டிசம்பர் 26-ம் தேதி செஞ்சூரியனில் முதல் டெஸ்ட் போட்டியுடன் தொடங்குகிறது.
ALSO READ | திடீர் என்று டெஸ்ட் அணியில் இருந்து விலகிய ரோஹித் - காரணம் என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR