11:21 PM 04-08-2019


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆட்டத்தின் 15.3-வது பந்தை எட்டிய நிலையில் மழையின் காரணமாக ஆட்டம் தடைபட்டது. அப்போதைய நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் குவித்திருந்தது.


கிறன் பொல்லாற்ட் 8(8), ஹெட்மையர் 6(4) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.



09:38 PM 04-08-2019


ரோகித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்துள்ளது. 


துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா 67(51), சிகர் தவான் 23(16) ரன்கள் குவித்து வெளியேற, இவர்களை தொடர்ந்த வந்த கோலி 28(23), ரிசாப் பன்ட் 4(5), மனிஷ் பாண்டே 6(8) ரன்கள் குவித்து வெளியேறினர். பின்னர் களமிறங்கிய குர்ணல் பாண்டயே 20*(13), ரவிந்திர ஜடேஜா 9*(4) ரன்களுடன் களத்தில் நின்றனர்.


168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் களமிறங்கவுள்ளது.



மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், டாஸ் வென்றுள்ள இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது!


மேற்கிந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.


இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைப்பெறுகிறது. முன்னதாக முதல் டி 20 போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றும்.



இன்றைய போட்டியில் இந்திய அணியின் ஸ்ரேயஸ் ஐயர், கே.எல் ராகுல், ராகுல் சஹர், தீபக் சஹர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


ரோகித் சர்மா, சிகர் தவான், விராட் கோலி, ரிசாப் பன்ட், மனிஷ் பாண்டே, குர்ணல் பாண்டயா, ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது ஆகியோர் களம் காண்கின்றனர்.


மேற்கிந்திய அணியை பொறுத்தவரையில் ஜான் கோம்பள், ஆண்டனி ப்ராம்பெல், ஜேசன் மொகமது ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.