India New Zealand Test Cricket News Tamil : இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான விளையாடும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் பெங்களூருவில் நடக்கிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி படுமோசமாக பேட்டிங் ஆடி 46 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அட்டகாசமாக பந்துவீசிய நியூசிலாந்து அணியில் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் 4 விக்கெட்டுகளையும் அள்ளினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி அற்புதமாக பேட்டிங்கும் செய்தது. அந்த அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லாம் ஆடிய விதத்தை பார்க்கும்போது, இந்த பிட்சிலா இந்திய அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது என யோசிக்க வைத்தது. கான்வே 91 ரன்கள், ரச்சின் ரவீந்திரா 134 ரன்கள், பின்வரிசையில் இறங்கிய டிம் சவுதி 65 ரன்கள் விளாச, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் குவித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்திய அணியை தூக்கிச் சாப்பிட்ட வில் ஓ ரூர்க்... ஐபிஎல் ஏலத்தில் இந்த 3 அணிகள் கொக்கி போடும்!


இதனால், 356 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை இன்று ஆடியது. சிறப்பாக இந்திய அணி பேட்டிங் ஆடியபோதும் சகுணம் சரியில்லாததால் இரண்டு விக்கெட்டுகள் தேவையில்லாமல் விழுந்தது. பந்துவீச்சின்போது கேட்சுகள் எப்படி அதிர்ஷ்டமில்லாமல் விழுந்ததோ அதைப் போலவே பேட்டிங்கின்போது விக்கெட்டுகளை நியூசிலாந்து அணிக்கு விழுவது போலவே இருந்தது. யஷஸ்வி ஜெய்ஷ்வால், கேப்டன் ரோகித் சர்மா ஓப்பனிங் இறங்கி சிறப்பாகவே பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். யஷஸ்வி தவறான ஷாட் ஆடி ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். ஆனால், ரோகித் நன்றாக ஆடிக் கொண்டிருக்கும்போது, அவரது விக்கெட் சகுணம் சரியில்லாத மாதிரி விழுந்தது. அதாவது அரைசதம் அடித்து ரோகித் 52 ரன்கள் எடுத்திருந்தபோது, ஸ்டிரோக் ஆட முயற்சித்தார். 


எப்போது, பந்து பேட்டில் பட்டு இன்சைடு எட்ஜில் சென்று ஸ்டம்பை பதம் பார்த்தது. ஒரு பிளேயர் எப்படி மோசமாக அவுட் ஆக கூடாதோ அப்படி ரோகித்தின் அவுட் இருந்தது. அதேபோல், விராட் கோலியும் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்திருந்தார். அவரும் சர்பிராஸ் கானும் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வலுவான நிலையை நோக்கி எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். சர்பிராஸ் 70 ரன்கள் எடுத்து ஒருமுனையில் இருக்க, இன்னொரு முனையில் விராட் 70 ரன்களுடன் இருந்தார். மூன்றாம் நாளின் கடைசி பந்து அது. அந்த பந்தை மட்டும் விராட் சரியாக ஆடியிருந்தால் நாளைய ஆட்டத்தை தொடர்ந்திருப்பார்.


ஆனால் பிலிப்ஸின் பந்துவீச்சில் மூன்றாம் நாளின் கடைசி பந்தில் கேட்ச் என்ற முறையில் அவுட்டானார். அவரின் விக்கெட் இந்திய அணியின் மோசமான நேரத்தில் விழுந்தது. இதனால் இந்திய அணி இப்போது சிக்கலில் சிக்கியிருக்கிறது. 125 ரன்கள் பின் தங்கியிருக்கும் இந்திய அணி நாளை மேற்கொண்டு 7 விக்கெட்டுகளை விழாமல் பார்த்து 200 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெற்றால் மட்டுமே இப்போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால் இன்னிங்ஸ் தோல்வி கூட இந்திய அணி  அடையலாம். அதனால் பரபரப்பான கட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளின் நான்காவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. 


மேலும் படிக்க | CSK: ரச்சின் ரவீந்திரா vs டெவான் கான்வே: சிஎஸ்கேவுக்கு பெரிய தலைவலி - யாரை எடுத்தால் நல்லது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ