இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றிப்பெற இந்தியாவிற்கு 265 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 44-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. 


நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் குவித்தது. அணியில் அதிகப்பட்சமாக அனுபவ வீரர் ஆங்கிலோ மேத்திவ்ஸ் 113(128) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக லஹிரு திருமண்னே 53(68) ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் ஜாஸ்பிரிட் பூம்ரா 3 விக்கெட் வீழ்த்தினார். புவனேஷ்வர் குமார், ஹார்டிக் பாண்டயா, ரவிந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.



இதனையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கவுள்ளது.


போட்டில் சுவாரசியமான விஷயமாக இலங்கையின் தரப்பில் வீழ்ந்த முதல் நான்கு விக்கெட்டுகளில் மகேந்திர சிங் தோனியின் பங்களிப்பு இருந்தது. முதல் இரண்டு விக்கெட்டுகளை பூம்ரா வீசிய பந்தில் கேட்ச் பிடித்து வெளியேற்றிய தோனி, மூன்றாவது விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றினர். இதனை தொடர்ந்து ஆட்டத்தில் 12-வது ஓவரில் ஹார்டிக் பாண்டயா வீசிய பந்தில் பெர்ணான்டோவின் கேட்சை பிடித்து முதல் நான்கு விக்கெட்டிற்கும் தனது பங்களிப்பை அளித்தார் தோனி.