டோக்கியோ:  ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் பைனலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) ஆடி வருகிறார். இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர்களில் மிக முக்கியமானவராகவும், இந்தியாவின் நம்பர் 1 வீரராக இருப்பவர் நீரஜ் சோப்ரா. இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன்ட் ஆப்ஸர் ரேங்கில் பணியாற்றி வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிப் போட்டியில் 23 வயதான இளம் வீரர்  நீரஜ் சோப்ரா கோப்பையை வெல்லப்போவது உறுதி என்ற நிலையில் ஆடி வருகிறார். தடகளத்தில் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


அரியானாவைச் சேர்ந்த இந்த தடகள வீரர், 86.65 மீட்டர் தூரத்தை எறிந்து, தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்தார் 


இன்று காலை கோல்ஃப் விளையாட்டின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் அதிதி (Women Golfer Aditi) 4வது இடம் பிடித்து பதக்கத்தை தவறவிட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனை சொதப்பியது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.


ALSO READ |  ஒலிம்பிக்கில் ஆறாவது பதக்கம்!! வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா


அதேபோல இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 65 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தத்தில் இந்தியாவின் பஜ்ரங் புனியா (Bajrang Punia) வெண்கலப் பதக்கம் வென்றார்.


இதுவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 


முதல் பதக்கம் முதல் நாளில் பளு தூக்குதலில் மீராபாய் சானுவால் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார். 


பிவி சிந்து பேட்மிண்டனில் இரண்டாவது பதக்கம் பெற்றார். 


மூன்றாவது பதக்கத்தை லவ்லினா போர்கெஹான் குத்துச்சண்டை போட்டியில் வென்றார். 


ரவி தஹியா மல்யுத்தப்போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். 


ஆண்கள் ஹாக்கி அணியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் வென்றது. 


மல்யுத்தத்தில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.


ALSO READ | 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் வெண்கலம் வென்றது இந்தியா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR