41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் வெண்கலம் வென்றது இந்தியா

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Aug 5, 2021, 09:05 AM IST
41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் வெண்கலம் வென்றது இந்தியா

ஒலிம்பிக் போட்டிகளில் இன்று இந்தியாவுக்கு ஏறுமுக நாள். இந்தியாவுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. ஹாக்கி போட்டியில் இந்தியா 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது. 

ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டி (Indian Hockey Team) இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில் முதல் 2வது நிமிடத்திலேயே ஜெர்மனி அணி கோல் அடித்து முன்னணி வகித்தது.

ALSO READ | Tokyo Olympics: இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது

முதல் கால் ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்து. ஆனால் இந்தியாவால் முதல் கோலை பதிவு செய்ய முடியவில்லை. ஆனால் இரண்டாம் கால் ஆட்டத்தில் தனி ஒருவனாக பந்தை விரட்டிச் சென்ற இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர் இந்தியாவுக்கான முதல் கோலை பதிவு செய்தார்.

அதன் பின்பு ஜெர்மனி 2 கோல்களை அடுத்தடுத்து விளாசி அதிர்ச்சி கொடுத்தது. விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் இந்திய வீரர்கள் மனம் தளராது விளையாடி வந்தனர். இந்திய வீரர்கள் அடுத்து கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை கோலாக்கினார். பின்பு இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் இந்தியாவுக்கான 3வது கோலை பதிவு செய்தார். இதனையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா 3, ஜெர்மனி 3 கோல் என சமநிலையில் இருந்தது. 

முதல் பாதி முடிவடைந்ததும் இந்திய வீரர் ருபிந்தர் சிங் பால் அற்புதமான கோலை பதிவு செய்தார். இதனையடுத்து ஜெர்மனி வீரர் செய்த தவறால் இந்தியாவுக்கு பெனால்ட்டி ஸ்டோக் வாய்ப்பு கிடைத்து. இதனை சிம்ரன்ஜீத் கவுர் எதிர்கொண்டு 5வது கோல் அடித்தார். இதனால் 3வது கால் ஆட்டத்தில் இந்தியா 5, ஜெர்மனி 3 கோல்கள் அடித்தன. அதன் பிறகு ஜெர்மனி ஒரு கோல் அடித்தது. பிறகு ஜெர்மனி தாக்குதலை கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தலைமையில் வெற்றிகரமாகத் தடுத்து வரலாறு படைத்தது. இந்தியாவுக்கு 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம். மேலும் ஜெர்மனியை 5-4 என்று இந்தியா அணி வீழ்த்தியது.

 

 

1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் பாஸ்கர் தலைமையில் இந்தியா கடைசியில் தங்கம் வென்றது இப்போது 2020 டோக்கியோ ஒலிம்பிகில் ஹர்மன்பிரீத் தலைமையில் வெண்கலம் வென்று சாதனை படைத்தது.

Also Read | Tokyo Olympics: பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து வெண்கலம் வென்றார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News