INDvsAUS: இந்தியா அபார வெற்றி! ஆஸ்திரேலியாவுக்கு தலைகுணிவு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
நாக்பூரில் நடைபெற்ற ஆலன்பார்ட் - கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது இந்திய அணி. 3ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியில் அக்சர் படேல் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்திருந்த அவர், 84 ரன்களுக்கு ஆட்டமிழக்க 400 ரன்களில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸூம் முடிவுக்கு வந்தது. அத்துடன் 223 ரன்கள் ஆஸ்திரேலிய அணியை விட முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியா தோல்வி
ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி, 2வது இன்னிங்ஸை விளையாட வந்தது. ஆரம்பம் முதலே அந்த அணியின் விக்கெட்டுகள் சீட்டுக் கட்டுகள் போல் சரிந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின், ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் துல்லியமாக பந்துகளை வீசி ஆஸ்திரேலிய அணியை நிலை குலையச் செய்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி வெறும் 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. குறிபாக, ஒரே செஷனில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.
அஸ்வின் அபாரம்
அஸ்வினைப் பொறுத்தவரை இந்த இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் மூலம் 31வது முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். மேலும் ஆலன் பார்டர் கவாஸ்கர் டிராபி போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலிலும் ஹர்பஜனை பின்னுக்கு தள்ளி 96 விக்கெட்டுகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறினார். அனில் கும்பிளே 111 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், 95 விக்கெட்டுகளுடன் ஹர்பஜன் 3வது இடத்திலும் உள்ளனர்.
இந்திய அணி சாதனை
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி செல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் இந்திய அணி மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. 43 போட்டிகளில் விளையாடி இருக்கும் இந்திய அணி 35 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 195 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணிக்கு, இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் எடுத்த மிக குறைபட்ச ரன்களாவும் பதிவானது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ