இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி - வெற்றி முனைப்பில் இந்தியா
பெங்களூருவில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பெங்களுருவில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி, இலங்கை அணியை 109 ரன்களுக்கு சுருட்டி 143 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, அதிரடியாக விளையாடியது.
மேலும் படிக்க | 40 வருட சாதனையை முறியடித்த ரிஷப் பன்ட் - 2 பந்தில் அப்ரிடி சாதனை மிஸ்
குறிப்பாக, ரிஷப் பன்ட் 28 பந்துகளில் அரைசதமடித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். அவருக்கு பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யரும் 67 ரன்கள் விளாச, இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்திருந்தது. ஒட்டுமொத்தமாக 446 ரன்கள் முன்னிலை பெற்றதால் கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணியின் 2வது இன்னிங்ஸை டிக்ளோர் செய்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் சொதப்பியது போலவே, 2வது இன்னிங்ஸிலும் தொடக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரான லகிரு திரிமன்னேவை எல்பிடபள்யூ என்ற முறையில் டக் அவுடாக வெளியேற்றினார். 9 விக்கெட்டுகள் கைவசம் வைத்துள்ள இலங்கை அணி, இன்னும் 419 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. இமாலய இலக்கை இலங்கை அணி எட்டுவது கடினம் என்பதால், இந்திய அணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது.
மேலும் படிக்க | IPL2022: ஐபிஎல் அணிக்காக தலைமுடி நிறத்தை மாற்றிய கிரிக்கெட் வீரர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR