வங்கதேச அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. வரும் நவம்பர் 3-ஆம் நாள் துவங்கும் இத்தொடர் வரும் நவம்பவர் 26-ஆம் நாள் வரை தொடர்கிறது.


இந்நிலையில் இன்று வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணி BCCI-யால் அறிவிக்கப்பட்டுள்ளது.




இதன் படி டி20 அணியில் இடம்பெற்றுள்ள அணி வீரர்களின் விவரம் பின்வருமாறு., ரோகித் ஷர்மா(கேப்டன்), சிகர் தவான், கே.எல் ராகுல், சன்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பன்ட், வாஷிங்டன் சுந்தர், குர்ணல் பாண்டையா, சாஹல், ராகுல் சஹர், தீபக் சஹர், கலீல் அகமது, சிவம் துபே, சர்துல் தாகூர்.


டி20 தொடரில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ஹிட் மேன் ரோகித் சர்மாவிற்கு தலைமை பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.


டெஸ்ட் அணியை பொறுத்தவரையில்., விராட் கோலி அணியை தலைமை தாங்குகிறார்., இவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஹனுமன் விஹாரி, சாஹா, ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ், மொகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷான்ட் ஷர்மா, சுபம் கில், ரிஷாப் பன்ட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.


டி20 தொடர் ஆனது நவம்பர் 3 துவங்கி நவம்பர் 10 வரையில் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 14 துவங்கி நவம்பர் 26 வரை நடைபெறுகிறது.