2023 ஆசியக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிகள் இந்தியாவில்! ஆசிய கால்பந்து கூட்டமைப்பு ஒப்புதல்
2023 ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றுகளை நடத்துவதற்கான இந்தியாவின் முன்மொழிவை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது
புதுடெல்லி: அடுத்த ஆண்டு ஜூன் 8, 11 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மூன்று போட்டிகளின் தகுதிச் சுற்றுகள் இந்தியாவில் நடைபெறும், 2023 ஆசியக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் விருப்பத்தை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது.
குழு வெற்றியாளர்கள் மற்றும் சிறந்த ஐந்து இரண்டாவது இடங்களைப் பெறும் அணிகள் முறையான போட்டியில் கலந்துக் கொள்வதற்கான வாய்ப்பைப் பெறும்.
கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளன. தகுதி சுற்று முடிவடைந்ததும், ஆசியக்கோப்பை போட்டிகள் ஜூன் 16, 2023 அன்று தொடங்கும்.
2023ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளின் மூன்றாவது சுற்றுப் போட்டிகளை நடத்துவதற்கான இந்திய அமைப்பின் முயற்சியை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) ஏற்றுக்கொண்டுள்ளது. சீனா 2023 இல் முக்கிய போட்டியை நடத்தும்.
"ஏஎஃப்சி ஆசிய கோப்பையின் மூன்றாவது சுற்று தகுதிச் சுற்று போட்டிகளை நடத்த நாங்கள் ஏலம் எடுத்தோம், எங்களது ஏலத்தை ஏற்றுக்கொண்ட ஆசிய கால்பந்து கூட்டமைப்பிற்கு நன்றி தெரிவிக்கிறோம்" என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (All India Football Federation (AIFF)) பொதுச் செயலாளர் குஷால் தாஸ் கூறினார்.
மேலும் படிக்க | அஃப்ரிடி ஐபிஎல்லில் விளையாடினால் அவர் விலை 200 கோடி ரூபாயா?
ஆசிய கோப்பைக்கு தகுதி பெறுவதற்கான இந்தியாவின் முயற்சியில், கொல்கத்தாவில் விளையாடுவது கூடுதல் சாதகமாக இருக்கும். இந்திய அணி கடந்த ஆசியக் கோப்பையின் ஒரு பகுதியாக இருந்தது, ஆனால் அதன் தொடக்க ஆட்டத்தில் தாய்லாந்திற்கு எதிராக சிறந்த வெற்றியைப் பெற்ற போதிலும் நாக் அவுட் போட்டிகளுக்குச் செல்ல முடியவில்லை” என்று தாஸ் கூறினார்
கொல்கத்தாவில் உள்ள உள்கட்டமைப்பு, ஸ்டேடியம், பயிற்சி அரங்குகள் மற்றும் உத்தியோகபூர்வ தங்குமிடங்கள் என அனைத்துமே போட்டிகள் நடத்துவதற்கு மிகவும் பொருத்தமானது. கால்பந்து சங்கத்தின் ஆதரவு மற்றும் மேற்குவங்க மாநில அரசும் எப்பொழுதும் முன்னுதாரணமாக இருந்து வருகிறது. ஜூன் மாதத்தில் நடைபெறும் இந்தப் போட்டிகளை ரசிகர்கள் நேரடியாக மைதானத்தில் நேரடியாக காண முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு பொதுச் செயலாளர் குஷால் தாஸ் கூறினார்.
மேலும் படிக்க | தொடங்கியது ரஞ்சி டிராபி 2021-22 போட்டிகள்
தகுதிச் சுற்றுக்கான இறுதிப் போட்டிக்கான டிரா பிப்ரவரி 24-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. "ஏஎஃப்சி ஆசிய தகுதிச் சுற்றின் இரண்டாவது சுற்றில், இந்தப் போட்டிகளை நடத்தும் சீனா உட்பட 13 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றிருந்தாலும், இறுதி 11 இடங்களுக்கான போட்டிகள் நடைபெற வேண்டும்.
இந்தியா, குவைத், கிர்கிஸ் குடியரசு, மலேசியா, மங்கோலியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய ஆறு நாடுகளில் உள்ள ஐந்து AFC மண்டலங்களில் ஜூன் மாதம் நடைபெறும் தகுதிச்சுற்று போட்டிகளில், ஆசியக்கோப்பையில் கலந்துக் கொள்ளும் 24 அணிகளும் இறுதி செய்யப்படும் என்றும் AFC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 10 ஆம் தேதி வரையிலான FIFA உலக தரவரிசையின் அடிப்படையில், 24 பங்கேற்பு அணிகள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்படும் என்றும் AFC உறுதிப்படுத்தியது. தற்போது தரவரிசைப் பட்டியலில் 104 வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, குழுவில் 1 வது இடத்தில் வைக்கப்படும்.
மேலும் படிக்க | IPL 2022 mega auction: ஏலத்தில் அதிக சம்பள உயர்வு பெற்ற 5 வீரர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR