India Tour of Sri Lanka: நாளை முதல் இந்தியா vs இலங்கை ஆட்டம் ஆரம்பம்
முன்னதாக ஜூலை 13 ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்க இருந்தது. ஆனால் இலங்கை வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக, ஒருநாள் மற்றும் டி-20 போட்டி நடைபெறும் தேதிகள் மாற்றியமைக்கப்பட்டது.
India Tour of Sri Lanka: ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது. இலங்கை அணிக்கு எதிராக இந்தியா 3-0 என்ற கணக்கில் வெல்ல பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. இரு அணிகளும் விளையாடும் மைதானம் சூழலுக்கு சாதமாக இருப்பதால், இந்திய அணியில் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களுக்கான இந்திய அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), பிருத்வி ஷா, தேவதூத் பாடிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, ஹார்டிக் பாண்ட்யா, நிதீஷ் ராணா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சஹார், குல்நாத்வ் , புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் சைனி, சேதன் சகரியா.
இதில் 11 பேர் கொண்ட அணி களத்தில் இறங்கும். அந்த 11 பேர் யார் என்பது குறித்து அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ரகசியமாக வைத்திருக்கிறார். நாளை ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு அறிவிப்பார்.
இந்தியா vs இலங்கை ஒருநாள் தொடர் விவரம்:
- 18 ஜூலை முதல் ஒருநாள் போட்டி - ப்ரேமதசா மைதானம்
- 20 ஜூலை இரண்டாவது ஒருநாள் போட்டி - ப்ரேமதசா மைதானம்
- 23 ஜூலை மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்பு ப்ரேமதசா மைதானம்
ALSO READ | டி 20 உலகக் கோப்பை 2021 குரூப் அறிவிப்பு: ஒரே பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்
இந்தியா ன் Vs இலங்கை, T20I தொடர்:
- 25 ஜூலை முதல் டி-20 - ப்ரேமதசா மைதானம்
- 27 ஜூலை 2வது டி-20 - ப்ரேமதசா மைதானம்
- 29 ஜூலை 3வது டி-20 - ப்ரேமதசா மைதானம்
இந்தியா vs இலங்கை தொடர் - நேரடி ஒளிபரப்பை எவ்வாறு பார்ப்பது?
இலங்கை சென்றுள்ள இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் ஒளிபரப்புகிறது. சோனி எல்.ஐ.வி, சோனி டென் 2 மற்றும் சோனி டென் 2 எச்டி டிவி சேனல் மூலம் பார்க்கலாம். கொரோனா தொற்று காரணமாக அனைத்து போட்டிகளும் கொழும்பு ப்ரேமதசா மைதானத்தில் மட்டும் நடைபெறவுள்ளது.
முன்னதாக ஜூலை 13 ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்க இருந்தது. ஆனால் இலங்கை வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக, ஒருநாள் மற்றும் டி-20 போட்டி நடைபெறும் தேதிகள் மாற்றியமைக்கப்பட்டது.
ALSO READ | TNPL 2021: போட்டி அட்டவணை, பங்கேற்கும் அணிகள், நேரம், நேரடி ஒளிபரப்பு -விவரங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR