இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட முதலாவது டி20 போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் பட்டியில்:- 


வார்னர் - புவனேஸ்வர் பந்தில் அவுட்- 5 பந்தில் 8 ரன்கள்.


ஆரோன் பிஞ்ச்  - குல்தீப் யாதவ் பந்தில் அவுட்- 30 பந்தில் 42 ரன்கள்.


க்ளென் மேக்ஸ்வெல் - 16 பந்தில் 17 ரன்களில் அவுட்.


ட்ராவிஸ் ஹெட் - 16 பந்தில் 9 ரன்கள் எடுத்து அவுட்.


ஹென்ரிக்ஸ் -  8 ரன்களில் அவுட்.


டானியல் - 13 பந்தில் 9 ரன் எடுத்து அவுட்.


பெய்ன் - 16 பந்தில் 17 ரன் எடுத்து அவுட்.


கவுல்டர்-நைல் - 2 பந்தில் ஒரு ரன் எடுத்து அவுட் ஆனார்.


இந்தியா 18.4 ஓவர்கள் வீசியிருந்த நிலையில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது.


தொடர்ந்து மழை பெய்ததால் இத்துடன் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் முடித்துக் கொள்ளபட்டு டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 


இந்திய அணியின் ஸ்கோர் பட்டியில்:- 


ரோஹித் சர்மா - 7 பந்தில் 11 ரன்கள்.


ஷிகர் தவான் -  12 பந்துகளில் 15 ரன்களுடனும்,


விராட் கோலி - 14 பந்துகளில் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது  டி-20 போட்டி வருகிற 10-ம் தேதி கவுஹாத்தியில் நடைபெற உள்ளது.