முதல் டெஸ்ட்; 3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இந்தியா 151/3; 166 ரன்கள் முன்னிலை
முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய மூன்று விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய மூன்று விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியை விட 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஏழு விக்கெட் கைவசம் உள்ள நிலையில், நாளை நான்காவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. புஜாரா* 40(127) மற்றும் ரஹேனே* 1(15) களத்தில் உள்ளனர்.
மூன்றாவது விக்கெட்டை இழந்த இந்திய அணி. விராட் கோலி 34(104) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்திய அணி. 45 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய கேப்டன் விராத் கோலி* 16(68) மற்றும் புஜாரா* 23(83) ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.
தேநீர் இடைவேளை வரை இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணியை விட 101 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாவது விக்கெட்டை இழந்த இந்திய அணி. லோகேஷ் ராகுல் 44(67) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 25 ஓவர் முடிவில் 80 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி. முரளி விஜய் 18(53) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்த நிலையில், தற்போது டெஸ்ட தொடர் நடைப்பெற்று வருகின்றது.
இத்தொடரின் முதல் போட்டி இந்திய நேரப்படி டிச., 6-ஆம் நாள் காலை 5.30 மணியளவில் துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 2(8), முரளி விஜய் 11(22) ரன்களுக்கு வெளியேற, முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய புஜாரா நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். 246 பந்துகளில் 123 ரன்கள் குவித்த புஜாரா ஆட்டத்தின் 87.5-வது பந்தில் வெளியேறினார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேற புஜாராவின் சதம் இந்தியாவினை 250 ரன்கள் குவிக்க உதவியது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் குவித்தது. களதிதல் முகமது ஷமி 6(9), ஜாஸ்பிரிட் பும்ரா 0(0) ரன்களுடன் இருந்தனர். இந்நிலையில் நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஷமி வெளியேற, இந்தியா 250 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸி., அணி வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் சிக்கி தவித்தனர். தொடக்க வீரராக களமிறங்கிய பின்ச் 0(3) ரன்களில் வெளியேற மார்கஸ் ஹரிஸ் 26(57), உஸ்மான் கவாஜா 28(125) ரன்களில் வெளியேறினர். அடுத்தடுத்து விக்கெட் விழுந்தாலும் டிராவிஸ் ஹெட் நிதானமாக விளையாடி 167 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 88 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து இருந்தது.
இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆனால் மழையின் குறுக்கீடு காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது. இறுதியாக ஆஸ்திரேலியா அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 15 ரன்கள் பின் தங்கியுள்ளது.
இந்திய அணி தரப்பில் பும்ரா, அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, சமி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
15 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது. 15 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து ஆடு வருகிறது.