இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் 2_வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடக்கவீரர்களாக ரோகித் சர்மா, ரஹானே களம் இறங்கினார்கள். ரோஹித் ஷர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர் நைல் பந்தில், அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 19 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது இந்திய அணி.


பிறகு களம் இறங்கிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ரஹானேவுடன் இணைந்து இருவரும் சற்று அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்ந்தினர். இருவரும் அரைசதத்தை பூர்த்தி செய்தனர். ரஹானே 55(பந்து 64; பவுண்டரி 7) ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார். விராட் கோலியுடன் இணைந்த மனிஷ் பாண்டே 3 ரன்களில் அவுட் ஆனர். பிறகு வந்த கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடி 24(பந்து 24, பவுண்டரி 2, சிச்சர் 1) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.


பின்னர் கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னால் கேப்டன் தோனி இணைந்தனர். ஆனால் இந்திய கேப்டன் விராட் கோலி 92 (பந்து 107, பவுண்டரி 8) ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் தோனியும் 5 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனர்.


இந்திய அணி 40 ஓவருக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்திருந்தது. ஹர்திக் பாண்ட்யா மற்றும் புவனேஷ்வர் குமார் இருவரும் நிதானமாக விளையாடினார்கள். புவனேஷ்வர் குமார் 20(33) ரன்களும், குல்தீப் யாதவ் 0(2) ரன்னிலும் அவுட் ஆனார்கள். ஹர்திக் பாண்ட்யா நிதானமாக விளையாடி 20( பந்து26, பவுண்டரி 2) ரன்கள் எடுத்து அவுட் ஆனர்.


யுஸ்வேந்திர சாஹல் 1 ரன் எடுத்து ரன்-அவுட் ஆனர். ஜஸ்பிரித் பும்ரா 10 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் உள்ளார். இந்திய அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 252 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா வெற்றி பெற 253 ரன்கள் தேவை.


 



 


ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் கவுல்டர் நைல் மற்றும் கேன் ரிச்சர்ட்சன் தலா 3 விக்கெட்டும், ஆஷ்டன் அகர் மற்றும் பேட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.