INDvsAUS: 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா!
50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது
17:35 08-03-2019
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா அணி சார்பில் அரோன் பின்ச் 93(99), உஷ்மான் 104(113) ரன்கள் குவித்தனர். இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை குவித்தார்.
16:35 08-03-2019
43.4 ஓவரில் ஐந்தாவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி. பீட்டர் ஹான்சாம்கோப் 0(2) ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இந்த விக்கெட்டை குல்தீப் யாதவ் கைப்பற்றினார்.
16:33 08-03-2019
43.2 ஓவரில் நான்காவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி. ஷான் மார்ஷ் 7(12) ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்த விக்கெட்டை குல்தீப் யாதவ் கைப்பற்றினார்.
16:27 08-03-2019
41.5 ஓவரில் மூன்றாவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி. மேக்ஸ்வெல் 47(31) ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார்.
16:12 08-03-2019
38.3 ஓவரில் இரண்டாவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி. உஸ்மான் கவாஜா 104(113) ரன்கள் எடுத்து அவுட். இந்த விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார்.
15:56 08-03-2019
33.3 ஓவரில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் கடந்துள்ளது.
15:39 08-03-2019
31.4 ஓவரில் முதல் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி. அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 93(99) ரன்கள் எடுத்து அவுட். அவரது விக்கெட்டை குல்தீப் யாதவ் கைப்பற்றினார்.
15:13 08-03-2019
ஆஸ்திரேலியா நிதமான அதிரடி. விக்கெட் இழப்பின்றி 150 ரன்களை கடந்தது. உஸ்மான் கவாஜா* 67(72) மற்றும் ஆரோன் பின்ச்* 76(76)
14:51 08-03-2019
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் அரை சதம் அடித்தனர். உஸ்மான் கவாஜா* 50(56) மற்றும் ஆரோன் பின்ச்* 64(58)
14:44 08-03-2019
ஆஸ்திரேலியா நிதனாமாக ஆடி ரன் சேர்த்து வருகிறது. விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது. ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
13:06 08-03-2019
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய உள்ளது.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று வருகிறது.
முன்னதாக இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் மார்ச் 2 ஆம் தேதி பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு விளையாடியது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது. 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மார்ச் 5 ஆம் தேதி ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடியது. இதில் இந்தியா 48.2-வது பந்தில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 250 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 49.3-வது பந்தில் 242 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனையடுத்த இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தநிலையில், இன்று 3_வது ஒருநாள் போட்டி ஜார்க்கண்ட் ராஞ்சியில் உள்ள JSCA ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா வெல்லும்.
அதேபோல இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா அணி உள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், தொடரை இழக்க நேரிடும். எனவே இன்றைய ஆட்டம் இருஅணிகளுக்கும் கடுமையான சவாலாக இருக்கும்.
இன்று நடைபெறும் போட்டி எம்.எஸ். தோனி சொந்த ஊரரில் எனபதால் அவர் மீதனா எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் உள்ளூர் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.