ஆஷ்டன் டர்னரின் அதிரடி ஆட்டத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது ஆஸ்திரேலியா!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நான்காவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 358 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை நிர்ணயித்த நிலையில், தடுமாறிய ஆஸ்திரேலியா, ஆஷ்டன் டர்னரின் அதிரடி ஆட்டத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி முதலில் பேட் செய்தது. துவக்க பார்ட்னர்ஷிப்புக்கு ரோஹித் ஷர்மா மற்றும் தவான் சேர்ந்து 1943 ரன்கள் விளாசினர். இறுதியில், இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 358 எடுத்தது.


கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் துவக்க வீரர் பின்ச் டக் அவுட்டானார். தொடர்ந்து வந்த மார்ஷும் 6 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த கவாஜா மற்றும் ஹேண்ட்ஸ்கோம்ப் மூன்றாவது விக்கெட்டுக்கு 192 ரன்கள் சேர்த்தனர். ஹேண்ட்ஸ்கோம்ப் 117 அடிக்க கவாஜா 91 ரன்கள் விளாசினார். மேக்ஸ்வெல் மற்றும் ஹேண்ட்ஸ்கோம்ப் விக்கெட் விழுந்த பின் ஆஸ்திரேலியா சிறிது நேரம் தடுமாறியது. 


தொடர்ந்து வந்த அதிரடி வீரர் ஆஷ்டன் டர்னர், இந்திய பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார். 43 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து, 47.5 ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா இலக்கை எட்ட அவர் உதவினார்.


 இந்த அபார வெற்றியை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தொடரை 2 2 என சமன் செய்துள்ளது. இறுதிப் போட்டி வரும் புதன்கிழமை டெல்லியில் நடைபெறுகிறது.