IND vs AUS | பும்ராவின் புயலில் சிக்கிய ஆஸ்திரேலியா... 72 ஆண்டு வரலாறு.. சாதித்த பவுலர்கள்
India vs Australia Latest Update: பார்டர்-கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 67/7 என்ற நிலையில் தடுமாற்றம். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
Border Gavaskar Trophy Latest News InTamil: இன்று இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் மிகவும் பரபரப்பாக இருந்தது. இரு அணிகளின் பந்துவீச்சாளர்களிடமிருந்தும் அற்புதமான பந்துவீச்சு தென்பட்டது. அதிலும் ஆஸ்திரேலியா மைதானத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வித்தியாசமான பந்து வீச்சு ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டியில் நடந்த சாதனை குறித்து பார்ப்போம்.
இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவும், ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் களம் இறங்கினார். பார்டர்-கவாஸ்கர் டிராபி வரலாற்றில் ஒரே டெஸ்டில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டனாக இருப்பது இதுவே முதல் முறையாகும். அப்படிப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டமும் பந்துவீச்சாளர்களின் கை ஓங்கி இருந்தது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்களால் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை. வெறும் 49.4 ரன்களில் 150 ரன்களை எடுத்த பிறகு ஒட்டுமொத்த அணியும் சரிந்தது. தனது முதல் டெஸ்டில் விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர, ரிஷப் பந்த் 37 ரன்கள் எடுத்தார். அதே சமயம் ஆஸ்திரேலியா சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் 2-2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன் பிறகு களம் கண்ட ஆஸ்திரேலியா அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் கதற விட்டனர். அதாவது ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களை விட ஒரு படி மேலே அற்புதமாக வீசினர். 150 ரன்களுக்கு பதிலடியாக ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பாதி பேர் 38 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினர். இதற்கு முக்கிய காரணம் ஜஸ்பிரித் பும்ரா. கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் ஆபத்தான முறையில் பந்துவீசி 10 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 பேட்ஸ்மேன்களை பலியாக்கினார். உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், பாட் கம்மின்ஸ் ஆகியோருக்கு பெவிலியன் செல்லும் வழியைக் காட்டினார். இவர்களைத் தவிர முகமது சிராஜ் 2 விக்கெட்டும், ஹர்ஷித் ராணா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இரு அணிகளின் பந்துவீச்சாளர்களும் இணைந்து தங்கள் பெயரில் ஒரு பெரிய சாதனையை படைத்தனர். பெர்த் டெஸ்டின் முதல் நாளில் மொத்தம் 17 பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். 1952-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் விழுந்த அதிக விக்கெட்டுகள் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, கடந்த 72 ஆண்டுகளில் பந்துவீச்சாளர்களின் இத்தகைய விக்கெட்டை வீழ்த்தியதில்லை. அதாவது இந்தியா-ஆஸ்திரேலியா கிய இரு அணிகளும் சேர்ந்து 72 ஆண்டு கால சாதனையை முறியடித்து உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது. ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸை விரைவில் முடிக்க இந்திய அணி ஆர்வமாக உள்ளது. அதே நேரத்தில், ஆஸ்திரேலியா தனது ஸ்கோரில் முடிந்தவரை அதிக ரன்கள் சேர்க்க விரும்புகிறது.
மேலும் படிக்க - KL Rahul : கேஎல் ராகுல் அவுட் இல்லை, 3வது நடுவர் கொடுத்த சர்ச்சை முடிவு
மேலும் படிக்க - IND vs AUS : இந்தியா வச்ச டிவிஸ்ட்.. ஆஸி ஏமாற்றம் - அஸ்வின், ஜடேஜா நீக்கம் பின்னணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ