ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் வங்கதேசத்தை இறுதி ஓவரில் வீழ்த்தி இந்திய அணி 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிதன்தாஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்து அணிக்கு பலம் சேர்த்தார், எனினும் 121 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 


மெஹிதி ஹசன் 32 ரன்களும், சவும்யா சர்க்கார் 33 ரன்களும் சேர்த்தனர். வங்கதேச அணி 48.3 ஓவர்களில் 222 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 48 ரன்களும், ஷிகர் தவான் 15 ரன்களும் எடுத்து வெளியேறினர். தினேஷ் கார்த்திக் 37 ரன்களும், தோனி 36 ரன்களும் எடுத்தனர். 
இந்தியாவின் கோப்பை கனவு பலிக்காமல் போய்விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புவனேஸ்குமார், ஜடேஜா ஜோடி ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.


கடைசி ஓவரில் 6 பந்துகளில் 6 ரன் எடுக்க வேண்டியிருந்ததால் பரபரப்பு அதிகரித்தது. 23 ரன்கள் எடுத்த கேதர் ஜாதவ் நிதானமாக விளையாடி கடைசிப் பந்தில் இந்திய அணியை வெற்றிக்கு எடுத்துச்சென்றார்.


7 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றறு 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.