ஆசிய கோப்பை சூப்பர் 4 பிரிவு முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆசியாவின் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் செப்டம்பர் 15-ஆம் நாள் துவங்கி செப்டம்பர் 28-ஆம் நாள் வரை நடைபெற்று வருகிறது. இத்தொடரின் சூப்பர் 4 பிரிவு முதல் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் விளையாடியது.


இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அதன்படி முதலில் பேட்டிங்க் செய்துவரும் வங்கதேச அணி வீரர்கள் ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.



துவக்க வீரர்களாக களமிறங்கிய லிட்டன் தாஸ் 7(16), ஹொசைன் சான்டோ 7(14) ரன்களில் வெளியேற, தொடர்ந்து களமிறங்கிய சாகிப் அல் ஹாசன் 17(12) ரன்களிலும், ரஹிம் 21(45) ரன்களிலும் வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழக்க, வங்கதேச அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 குவித்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா  விக்கெட்டுகளையும், புமரா, புவனேஷ்வர்குமார் தலா 3 விக்கெட்டுகளையும் குவித்தனர்,.


இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஷிகர் தவான் 40(47) மற்றும் ரோகித் ஷர்மா 83*(104) அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இதன்காரணமாக இந்தியா அணி ஆட்டத்தின் 36.2-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி வாகை சூடியது.


சூப்பர் பிரிவு ஆட்டத்தின் மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் நாடுகள் மோதின. இப்போட்டியில் பாக்கிஸ்தான் ஆணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது!