ஹர்திக்கின் அதிரடியில் இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய அணி!
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி விடுபட்டு போன ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வரலாற்றுப் வெற்றி பெற்ற நிலையில், நேற்று டி20 போட்டிகள் தொடங்கியது. விராட் கோலி, ரிஷப் பந்த், பும்ரா போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா காயத்திலிருந்து மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நான்கு பவுலர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் இந்திய அணி களம் இறங்கியது.
மேலும் படிக்க | ஷிகர் தவான் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அடுத்தடுத்து இரண்டு அதிர்ச்சிகளை கொடுத்தார் மொயின் அலி. இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவின் விக்கெடுகளை வீழ்த்தினார் அலி. பிறகு ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா மற்றும் சூரியகுமார் யாதவ் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். இவர்களின் அதிரடியால் இந்திய அணி எட்டு ஓவர்களில் 80 ரன்களை கடந்தது. பிறகு களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா தனது ஐபிஎல் அதிரடி ஆட்டத்தை காண்பித்தார். வெறும் 33 பள்ளிகளில் அரைசேதம் அடித்து இந்திய அணியை ஒரு நல்ல ஸ்கூரை எட்ட உதவினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்களை இழந்து 198 ரன்கள் குவித்தது.
சிறிது கடினமான இலக்கை எதிர்த்து களம் இறங்க இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி அடுத்தடுத்து அதிர்ச்சிகளை வைத்தது. கேப்டன் பட்லர் முதல் பந்திலயே போல்ட் ஆகி வெளியேறினார், மறுபுறம் மற்றொரு தொடக்க வீரர் ஜேசன் ராய் 4 ரன்களுக்கு அவுட் ஆனார். டேவிட் மாலன், லிவிங்ஸ்டோன் ஆகியோரது விக்கெட்களை ஹர்திக் பாண்டியா தூக்கினார். சிறிது நேரம் அதிரடி கட்டிய மொயின் அலி 36 ரன்களுக்கு வெளியேறினார். இறுதியில் இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் இந்த போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
மேலும் படிக்க | 2008-ல் பாண்டிங்கிற்கு தோனி கொடுத்த அந்த மெசேஜ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR