Ind vs Eng 3rd Test: இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
இந்த முறை இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியாவுக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது.
லீட்ஸ்: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் இன்று மாலை 3:30 மணிக்கு தொடங்குகிறது. மூன்றாவது டெஸ்டில் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி போட்டிக்கு முன்பே வெளிப்படுத்தியுள்ளார்.
நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் கடைசி (IND vs ENG) நாளில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் மழை புகுந்து கெடுத்து விட்டது. அந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதைத் தொடர்ந்து லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை (England) புரட்டி எடுத்ததோடு தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ALSO READ | Ind vs Eng: மூன்றாவது டெஸ்டில் இந்த 3 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்
இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் (England vs India, 3rd Test) போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3, டென் 4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
போட்டியாளர்களின் விவரம்:
இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா அல்லது அஸ்வின், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத், ஜோ ரூட் (கேப்டன்), டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயீன் அலி, சாம் கர்ரன், ஆலி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், சகிப் மமூத் அல்லது கிரேக் ஓவர்டான்
இந்த மைதானத்தில் நடந்த கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், இந்தியா இங்கிலாந்தை தோற்கடித்தது. இந்த முறை இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியாவுக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது. இந்தியா கடைசியாக 2007 ல் இங்கிலாந்தை தங்கள் மண்ணில் டெஸ்ட் தொடரில் தோற்கடித்தது. அன்றிலிருந்து இன்றுவரை அவரால் இந்த நாட்டில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை.
ALSO READ | 19 ஆண்டுகளுக்குப் பிறகு லீட்ஸ் மைதானத்தில் ஆடப்போகும் இந்திய அணி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR