வேகத்தில் மிரட்டும் இந்திய பவுலர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சிக்கும் குறைவாக இங்கிலாந்து அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணி அசத்தியது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 19, 2021, 05:15 PM IST
  • பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிச்சில் ஆல்ரவுண்டர் அஸ்வினை விட்டு இஷாந்த் சர்மாவை அணியில் சேர்த்தவன் மூலம் தனது கேப்டன் திறமையை வெளிப்படுத்தினார் விராட் கோலி.
  • முதல்முறையாக இங்கிலாந்தின் லாட்ஸ் மைதானத்தில் விளையாடிய முகமது சிராஜ் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
வேகத்தில் மிரட்டும் இந்திய பவுலர்கள்!  title=

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சிக்கும் குறைவாக இங்கிலாந்து அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணி அசத்தியது.   டிராவில் முடிய வேண்டிய ஆட்டத்தை இந்திய அணி வென்று சாதனை படைத்தது. 

இந்திய அணியின் பவுலிங் நாளுக்கு நாள் சிறப்பாக கொண்டே செல்கிறது.  ஒரு காலத்தில் இந்திய அணியின் பந்துவீச்சை பற்றி விமர்சனம் செய்தவர்களின் வாய்களை அடைக்கும் வகையில் யாரும் சமாளிக்க முடியாத அளவிற்கு தற்போது இந்திய பந்துவீச்சாளர்கள் வந்துள்ளனர்.  இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுக்களை விரைவாக எடுக்க எந்த பவுன்சர் பந்துகளையும் போடாமல்,  முழுக்க முழுக்க தங்கள் திறமையான பவுலிங்கில் மூலம் மட்டுமே விக்கெட்டுகளை எடுத்தனர். 

TeamIndia

ஒவ்வொரு இங்கிலாந்து வீரர்களுக்கும் ஏற்றவாறு சில நுணுக்கமான பந்துவீச்சின் மூலம் இந்திய பவுலர்கள் இசாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, சிராஜ் எதிரணியை கலங்கடித்தனர்.  வழக்கமான முறையில் பௌலிங் செய்யாமல் விக்கெட்டுகளை எப்படி எடுப்பது என்று மட்டுமே யோசித்து பவுலிங் செய்தனர்.  இந்திய அணியின் வேகப்பந்து வீச்சால் 2 டெஸ்டுகளில் இங்கிலாந்து அணியின் 39 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது.  51.5 ஓவர்களில் கடைசி நாள் ஆட்டத்தில், இரண்டு இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியை ஆல் அவுட் ஆக்கினர் இந்திய பவுலர்கள். 

பும்ரா மற்றும் ஷமியை நம்பி இறங்கிய இந்திய அணிக்கு, முகமது சிராஜ் மற்றும் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சு  கூடுதல் பலத்தை தந்தது.  முதல் இன்னிங்சில் இசாந்த் சர்மாவும் இரண்டாவது இன்னிங்சில் சிராஜின் சிறப்பாக பந்துவீச்சினால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினை அணியில் சேர்க்க அதிக வாய்ப்பு இருந்தபோதும் அவருக்கு பதிலாக இஷாந்த் சர்மாவை சேர்க்கப்பட்டார்.  இதற்கு போட்டியின் முதல் நாள் ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பு வந்த நிலையில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை வெளிப்படுத்தினார் இசாந்த் சர்மா. 

முதல்முறையாக இங்கிலாந்தின் லாட்ஸ் மைதானத்தில் விளையாடிய முகமது சிராஜ் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.  இரண்டாவது இன்னிங்சில் ஷமி மற்றும் பும்ராவின் அசத்தலான பேட்டிங்கும் இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தது.  பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிச்சில்  ஆல்ரவுண்டர் அஸ்வினை விட்டு இஷாந்த் சர்மாவை அணியில் சேர்த்தவன் மூலம் தனது கேப்டன் திறமையை வெளிப்படுத்தினார்  விராட் கோலி. 

ALSO READ இங்கிலாந்து பவுலர்களை அசரவைத்த ஷமி மற்றும் பும்ரா!

தற்போது இந்திய டெஸ்ட் அணியில் முக்கியமான பவுலராக மாறியுள்ளார் சிராஜ்.  சிறப்பான பந்துவீச்சு மட்டுமின்றி விக்கெட்டுகளையும் எடுத்துக் கொடுக்கிறார்.   தற்போது உள்ள இந்திய அணி பவுலர்கள்   அனைவருமே கிட்டத்தட்ட 140 கிலோமீட்டர் வேகத்தில் போடக் கூடியவர்கள் என்பதால் எதிரணியினரை வேகத்தில் கலங்கடிக்க உதவியாக உள்ளனர். இந்தியா மற்றும் இங்கிலாந்து என இரண்டு அணிகளுமே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News