Ind vs Eng: மூன்றாவது டெஸ்டில் இந்த 3 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்

மூன்றாவது டெஸ்டில் (England vs India, 3rd Test), இந்தியா அணிக்காக விளையாடும் லெவன் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்படலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 23, 2021, 01:04 PM IST
  • ஆகஸ்ட் 25 முதல் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி.
  • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை.
  • 3 வது டெஸ்டில் 3 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
Ind vs Eng: மூன்றாவது டெஸ்டில் இந்த 3 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் title=

புதுடெல்லி: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி ஆகஸ்ட் 25 முதல் லீட்ஸ் ஹடிங்லி (Leeds Headingley) மைதானத்தில் நடக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (India tour of England, 2021) இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். லீட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்று இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற விரும்புகிறது. மேலும் இந்த வெற்றி மூலம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழக்காது. மூன்றாவது டெஸ்டில் (England vs India, 3rd Test), இந்தியா அணிக்காக விளையாடும் லெவன் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்படலாம். 

1. புஜாராவை வீழ்த்தி சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) வலுவான போட்டியாளராக இருப்பார் எனக் கருதப்படுகிறார். லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சேதேஷ்வர் புஜாரா 206 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். புஜாராவின் பேட்டில் இருந்து சில ரன்கள் வந்தாலும், அவர் பேட்டிங் செய்த விதம் விவாதத்துக்குள்ளானது. புஜாராவின் மெதுவான ஆட்டத்தால் 206 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தது ரசிகர்களை மிகவும் சலிப்படையச் செய்தது. லார்ட்ஸ் டெஸ்டின் நான்காவது நாளில் புஜாரா மிகவும் மெதுவாக விளையாடினார். ரன் எடுக்கவேண்டிய பந்துகளில் கூட ரன்கள் எடுக்கும் முயற்சியில் புஜாரா ஈடுபடவில்லை என அவர் மீது குற்றசாற்று வைக்கப்பட்டது.

புஜாரா நீண்ட காலமாக மோசமான நிலையில் ஆடி வருகிறார். இத்தகைய சூழ்நிலையில், சுலோ பேட்டிங் காரணமாக, அடுத்த டெஸ்ட் போட்டியில், 11 பேர் கொண்ட பட்டியலில் புஜாராவின் பெயர் இருக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேதேஷ்வர் புஜாராவின் (Cheteshwar Pujara) செயல்திறன் கேள்விக்குறியாக உள்ளது. அவரின் இடத்தில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் சூர்யகுமார் யாதவ் போன்ற திறமையான பேட்ஸ்மேன் இருக்கிறார். அவர் மைதானத்தைச் சுற்றி ஒன்றுக்கு மேற்பட்ட ஷாட்டுகளை ஆடி ரன்கள் பெறும் கலையை அறிந்தவர். சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் அணியில் நுழைவது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது.

ALSO READ | 19 ஆண்டுகளுக்குப் பிறகு லீட்ஸ் மைதானத்தில் ஆடப்போகும் இந்திய அணி!

2. ஜடேஜாவை வீழ்த்தி அஷ்வினுக்கு வாய்ப்பு
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக ஆர் அஷ்வினுக்கு (R Ashwin) வாய்ப்பு வழங்கப்படலாம். லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் அந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆடவில்லை. இரண்டாவது டெஸ்டில், விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவை (Ravindra Jadeja) விளையாடும் லெவன் அணியில் சேர்த்தார். ஆனால் பந்து மற்றும் பேட் இரண்டிலும் ஜடேஜாவின் செயல்திறன் மிகவும் மோசமாக இருந்தது. லார்ட்ஸ் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில், ஜடேஜா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ப்ளேயிங் லெவனில் ரவீந்திர ஜடேஜாவை சேர்த்ததன் நோக்கம் தோல்வியடைந்தது. அந்த டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவால் ஒரு விக்கெட் எடுக்கவோ அல்லது பெரிய இன்னிங்ஸை விளையாடவோ முடியவில்லை.

இங்கிலாந்தின் பேட்ஸ்மேன்கள் ஜடேஜாவின் பந்துகளில் ரன்கள் எடுக்கின்றனர். ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இந்திய அணியின் ஆடும் லெவனில் சேர்க்கப்படமல் இருந்தது இந்திய அணிக்கு ஒரு இழப்பாக இருந்தது. எனவே 3 வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.

ALSO READ | IND vs ENG: லார்ட்ஸ் டெஸ்டில் ஏன் சேர்க்கப்படவில்லை? உண்மையை சொன்ன ரவிச்சந்திரன் அஷ்வின்

3. இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு
மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூருக்கு (Shardul Thakur) வாய்ப்பு வழங்கப்படலாம். இரண்டாவது டெஸ்டில் 5 விக்கெட்டுகளுடன் சிறப்பாக செயல்பட்ட இஷாந்த் சர்மா, மூன்றாவது டெஸ்டில் விளையாடுவது கடினம். முதல் டெஸ்டுக்குப் பிறகு காயமடைந்த ஷர்துல் தாக்கூர், மூன்றாவது டெஸ்டில் விளையாடத் தயாராக இருப்பார். இரண்டாவது டெஸ்டில், அவருக்கு பதிலாக இஷாந்த் சர்மா (Ishant Sharma) சேர்க்கப்பட்டார். விராட் கோலி கண்டிப்பாக ஷர்துலுக்கு மூன்றாவது டெஸ்டில் தனது அணியில் ஒரு இடத்தை கொடுக்க விரும்புவார். ஏனென்றால் அவர் பந்து வீச்சு மற்றும் பேட் இரண்டிலும் தனது திறமையை காட்டக்கூடியவர்.

ALSO READ | India vs England, 2nd Test: மூன்றாவது வெற்றியை பதிவு செய்த இந்தியா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News