இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி பிரிம்மிஹாமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 5வது மற்றும் கடைசி நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. 7 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய அணி வெற்றி பெறலாம். கைவசம்  வைத்திருக்கும் 7 விக்கெட்டுகளையும் இழக்காமல் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியும் களமிறங்க காத்திருக்கின்றன. பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இன்றைய போட்டியை இந்த ரசிகர்களும் எதிர்நோக்கி இருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரிஷப் பந்த் சதம் அடிக்கவில்லை, அது பந்துவீச்சாளர்களின் தவறு - முகமது ஆசிப்


இங்கிலாந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் முனைப்பில் ஜோ ரூட் மற்றும் ஜானி பேரிஸ்டோவ் களத்தில் இருக்கின்றனர். ரூட் 76 ரன்களையும், பேரிஸ்டோவ் 72 ரன்களையும் எடுத்துள்ளனர். 14 ரன்களில் பேரிஸ்டோவ் கொடுத்த கேட்சை ஹனுமா விஹாரி கோட்டை விட்டதால், இந்திய அணியின் பக்கம் இருந்த மேட்ச், தற்போது இங்கிலாந்து வசம் சென்றுள்ளது.


போட்டியின் தற்போதைய நிலை குறித்து பேசிய விக்ரம் ரத்தோர், ஷார்ட்பால்களை இந்தியா சரியான திசையில் வீசி நெருக்கடி கொடுக்காதது தவறு எனக் கூறியுள்ளார். இங்கிலாந்து அணியின் பலவீனத்தை இந்திய அணி சோதித்து இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. போட்டி டிரா ஆனால் கூட இந்திய அணி வெற்றி பெற்றுவிடும். ஏனென்றால், 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2க்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 


இப்போதைய சூழலில் இந்தப் போட்டி டிரா ஆக வாய்ப்புகள் குறைவு என்பதால், இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை வீழ்த்துவதையே இந்திய வீரர்கள் குறிக்கோளாக கொண்டிருப்பார்கள். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 350 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்து, இந்திய அணி ஒருமுறைகூட தோற்றதில்லை. இந்திய அணியின் அந்த வரலாறு தொடருமா? அல்லது முடிவுக்கு வருமா? என்பது போட்டியின் முடிவில் தெரியவரும்.


மேலும் படிக்க | பும்ரா வேகத்தில் நொறுங்கும் சாதனைகள்! 40 ஆண்டுகால சாதனை முறியடிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR