India vs England: இந்தியா இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடர் மற்றொரு முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது. இந்த தொடருடன் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடங்கும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி துவங்கவுள்ள டெஸ்ட் போட்டிகள் குறித்த அதிகப்படியான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. இதற்குப் பிறகு இந்த ஆண்டு இறுதியில் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும். 


இ.எஸ்.பின்.என்-இன் ஒரு அறிக்கையின்படி, இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (World Test Championship) ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்டுள்ள தொடர்களாக இந்த இரண்டு தொடர்கள் மட்டுமே இருக்கும். 


அந்த அறிக்கையின்படி, ஆஸ்திரேலியா 2021 இல் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்டுள்ள தொடரில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். இந்த தொடருக்கான அட்டவணை மற்றும் இடங்கள் குறித்து ஐ.சி.சி இன்னும் முடிவு செய்யவில்லை.


ALSO READ: Breaking News: T20 உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் இருந்து UAEக்கு மாறியது - BCCI


இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், அனைத்து அணிகளும், தங்கள் நாடுகளில் மூன்று தொடர்களிலும் மற்ற நாடுகளில் மூன்று தொடர்களிலும் விளையாடும். தொடக்க WTC சுழற்சியில் COVID-19 தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சுற்றுப்பயணங்கள் மீண்டும் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நடத்தப்படாது. 


இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்தியா 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா 15 போட்டிகளில் விளையாடும். மிக அதிகமாக இங்கிலாந்து மொத்தம் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். 


ஒவ்வொரு டெஸ்டுக்கும் ஒரே எண்ணிக்கையிலான புள்ளிகளைக் கொடுக்க ஐ.சி.சி முடிவு செய்துள்ளது. டை ஆகும் போட்டி அணிகளுக்கு ஆறு புள்ளிகளைக் கொடுக்கும். டிரா ஆகும் போட்டிகளில் நான்கு புள்ளிகள் கிடைக்கும். போட்டிகளில் வெல்லும் அணிக்கு 12 புள்ளிகள் வழங்கப்படும். குறைவான ஓவர் வேகத்துக்கு ஒரு புள்ளி கழிக்கப்படும். 


"ஒரு தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இருந்தாலும், ஐந்து போட்டிகள் இருந்தாலும், அனைத்து தொடருக்கான புள்ளிகளும் ஒரே அளவில்தான் இருக்கும். அடுத்த சுழற்சியில், ஒவ்வொரு போட்டிக்கும் ஒரே எண்ணிக்கையிலான புள்ளிகள் வழங்கப்படும்" என ஐ.எஸ்.சி.யின் (ICC) செயல் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் கூறியதாக இ.எஸ்.பின்.என் க்ரிக் இன்ஃபோ கூறியுள்ளது. 


அணிகள் அவர்கள் விளையாடிய போட்டிகளில் இருந்து கிடைத்த புள்ளிகளின் சதவீதத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படும்.


"புள்ளிகள் அளிக்கப்படும் முறையை எளிமையாக்க முயற்சிப்பதும், எந்த நேரத்திலும் அணிகளை அர்த்தமுள்ள வகையில் அட்டவணையில் ஒப்பீட்டில் இருக்க வைப்பதை சாத்தியப்படுத்த முயற்சிப்பதும் இதன் நோக்கமாகும். அணிகள் விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கை மாறுபட்டாலும், நியாயமான புள்ளிகளைப் பெறும் நிலையை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது" என கூறப்ப்பட்டுள்ளது.


ALSO READ: ICC on T20 World Cup 2021: அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை UAE-Omanல் நடைபெறும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR