WTC Final: நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியால். அணி நிர்வாகத்தின் மீது பல கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. அணியில் சில வீரர்களை அணியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழும்பி வருகிறது.
சில வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்படலாம்
WTC இறுதிப் போட்டியில் (WTC Final) அணியைத் தேர்ந்தெடுப்பதில் நிர்வாகம் சில தவறுகளைச் செய்துள்ளதாக கருதப்படுகின்றது. இப்போது அடுத்ததாக நடக்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலாவது இவை திருத்தப்பட வேண்டும்.
இங்கிலாந்தில் உள்ள சூழலின் படி, இப்போது அணியில் சில வீரர்கள் அதற்கு பொருந்தவில்லை. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, சேதேஷ்வர் புஜாரா, சுப்மான் கில் ஆகியோர் அடுத்து வரவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடாமல் போகலாம். இந்த வீரர்கள் அனைவரும் சிறந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் இங்கிலாந்தின் பிட்ச் மற்றும் சூழலைப் பொறுத்தவரை அவர்கள் அணிக்கு சரியான சமநிலையை அளிக்க மாட்டார்கள்.
ALSO READ: WTC2021: நியூசிலாந்து இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
WTC இறுதிப் போட்டியில் தவறு ஏற்பட்டது
இதற்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு WTC இறுதிப் போட்டிதான். WTC இறுதிப் போட்டியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்தது மிகப்பெரிய தவறாகிப் போனது. இங்கிலாந்தில், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகமான சூழல் உள்ளது.
அணியில் ஜடேஜாவுக்கு (Ravindra Jadeja) பதிலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு இடம் வழங்கப்பட்டிருக்கலாம். மறுபுறம், ஜஸ்பிரீத் பும்ரா வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருப்பது போல சிவப்பு பந்தில் அத்தனை சிறப்பாக செயல்படுவது இல்லை. ஆகையால், அவருக்கு பதிலாக வரும் தொடரில் முகமது சிராஜுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
புஜாரா மற்றும் கில்லும் பல போட்டிகளில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. இவர்களுக்கு பதிலாக மய்ங்க் அகர்வால் மற்றும் கே.எல். ராகுல் போன்றவர்களை இந்திய அணியில் (Team India) சேர்ப்பது பற்றி அணி நிர்வாகம் யோசிக்க வேண்டும்.
இந்த வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கலாம்
வரும் காலங்களில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக, வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகூருக்கு அணியில் இடம் கிடைக்கலாம். ஷார்துல் பந்தை ஸ்விங் செய்வதில் பெரும்பாலும் வெற்றி காண்கிறார். மேலும் அவர் இங்கிலாந்து சூழலுக்கு ஏற்ற பந்துவீச்சாளராக இருக்கக்கூடும். அதேபோல், பும்ராவுக்கு பதிலாக, சிராஜ் அணியில் இடம் பெறக்கூடும். இவர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அற்புதமாக பந்து வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: MS Dhoni vs Virat Kohli: WTC தோல்விக்குப் பிறகு ட்விட்டரில் துவங்கிய புதிய விவாதம்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR