2022 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2022 போட்டிகளில், இந்தியாவின் முதல் ஆட்டத்தில், இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடும். இந்த போட்டி நியூசிலாந்தின் டவுரங்காவில் நடைபெறும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகளிருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை (Women's World Cup) போட்டிகள், மார்ச் 4, 2022 அன்று டவுரங்காவில் உள்ள பே ஓவல் மைதானத்தில் தொடங்கும். முதல் போட்டியில் நியீசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அனியுடன் விளையாடும். 


அடுத்த நாள் ஹாமில்டனில் உள்ள செடான் பூங்காவில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. மொத்தம் 31 ஆட்டங்கள் 31 நாட்களில் நடக்கும். மகளிர் உலகக் கோப்பை பட்டத்தை வெல்ல எட்டு அணிகள் மோதுகின்றன.


ஐசிசியின் (ICC) கூற்றுப்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகியவை ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் 2017-20 இல் தங்கள் தர நிலையின் அடிப்படையில் போட்டிக்குத் தகுதி பெற்றன. நியூசிலாந்தில் இந்த போட்டிகள் நடப்பதால், அந்த நாடு தானாக தகுதி பெற்றது. 


ALSO READ | SACHIN: 2 இந்திய வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் சச்சினின் நண்பர்


2022 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் முழு அட்டவணையை இங்கே காணலாம்: 



இந்த மெகா நிகழ்வு லீக் வடிவத்தில் விளையாடப்படும். இதில் பங்கெடுக்கும் எட்டு நாடுகளும் ஒரு முறை நேருக்கு நேர் மோதும். அதன் முடிவில் முதல் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.


 


உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் மார்ச் 30ஆம் தேதியும், ஹாக்லி ஓவலில் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மார்ச் 31ஆம் தேதியும் நடைபெறும். இறுதிப் போட்டிகள் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறும். இரண்டு அரையிறுதிப்போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிக்கு ஒரு ரிசர்வ் தினமும் அளிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது. 


கோவிட்-19 (COVID-19) தொற்றுநோய் தொடங்கிய பின் நடக்கும் பெண்கள் கிரிக்கெட்டின் முதல் உலகளாவிய போட்டியாக இது இருக்கும். இதற்கு முன்னர், 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஆஸ்திரேலியாவில் ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பை நடைபெற்றது. இதில், இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 


ALSO READ | தென்ஆப்பரிக்க தொடரில் விராட் விலகுவது ஏன்? பின்னணி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR