தென்ஆப்பரிக்க தொடரில் விராட் விலகுவது ஏன்? பின்னணி

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விராட்கோலி விலக உள்ளதாக கூறப்படுகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 14, 2021, 01:30 PM IST
  • தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விராட்கோலி விலக உள்ளதாக தகவல்
  • தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருவதால், குடும்பத்துடன் நேரம் செலவிட கோலி விருப்பம்
  • வேண்டுகோளின்படி அவருக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவு என தகவல்
தென்ஆப்பரிக்க தொடரில் விராட் விலகுவது ஏன்? பின்னணி  title=

தென்ஆப்பிரிக்காவுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. டெஸ்ட் அணிக்கு விராட் கோலி (Virat Kholi) கேப்டனாக செயல்பட உள்ளார். ஒரு நாள் போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டாலும், அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக ஓய்வெடுத்து வருகிறார். இதனால், டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒருநாள் போட்டிக்கு முன்பாக, உடல் தகுதியை எட்டிவிட்டால் அவர் தென்ஆப்பிரிக்கா தொடரில் பங்கேற்பார்.

ALSO READ | Cricket: தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து கேப்டன் ரோகித்சர்மா விலகல்?

இதற்கிடையே, விராட்கோலி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. ஐ.பி.எல் போட்டி, உலகக்கோப்பை, நியூசிலாந்து தொடர் என வரிசையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவதால், குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கு விராட் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளை முடித்தவுடன் இந்தியா திரும்ப உள்ளதாகவும், இது குறித்து பிசிசிஐக்கு விராட் கோலி வேண்டுகோள் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்போதைய சூழலில் பிசிசிஐ இது குறித்து முடிவெடுக்கவில்லை என தெரிவித்துள்ள பிசிசிஐ வட்டாரங்கள், ரோகித் சர்மாவின் காயத்தின் தன்மை தெரிந்தபிறகு இறுதி முடிவெடுக்கும் என கூறப்படுகிறது. அதேநேரத்தில், வீரர்களின் முடிவை மதிக்கும் நோக்கில் விராட்டுக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்மையில், இந்திய ஒருநாள் கேப்டன் பதவியை பிசிசிஐ பறித்ததால், விராட் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால், டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்றுவிட்டு, ஒருநாள் போட்டியை புறக்கணிப்பார் என்ற தகவல்களும் பறந்தன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக விராட்கோலியின் செய்கை இருப்பதாக கருத்தப்படுகிறது. ஆனால், பிசிசிஐ நிர்வாகி ஒருவர், இதனை மறுத்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாக்கு இடையே எந்தவித மனக்கசப்பும் இல்லை, குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்காகவே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் எனவும் விளக்கமளித்துள்ளார். 

ALSO READ | ’ரோகித் பெஸ்ட்’ பழைய பகையால் கோலியை சீண்டும் இந்திய முன்னாள் வீரர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News