இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பண்டியா உடல் நலம் குறித்து BCCI தகவல்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணி நேற்று முன் தினம் ஹாங்காங் போட்டியில் தடுமாறி வென்ற நிலையில், நேற்று வலுவான பாகிஸ்தான் அணிக்கு எதிராக என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.


இந்தியா இதுவரை நன்றாகவே ஆடி வருகிறது. பாகிஸ்தான் அணி 30 ஓவர்கள் முடிவில் 113 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் இழந்து ரன் எடுக்க முடியாமல் தவித்து வருகிறது. நேற்றைய போட்டியில் ஓய்வில் இருந்த ஹர்திக் பண்டியா இந்த போட்டியில் பங்கேற்றார். ஒரு கூடுதல் ஆல் ரவுண்டர் இருப்பது இந்தியாவின் மிடில் ஆர்டர் பிரச்சனைக்கு முடிவு கட்ட உதவியாக இருக்கும் என்பதால் இது நல்ல முடிவாகவே இருந்தது. பண்டியா நன்றாகவே பந்து வீசி வந்தார். 4.5 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து இருந்தார். 


விக்கெட்கள் எடுக்காவிட்டாலும் ரன்கள் கொடுக்காமல் வீசினார். இந்த நிலையில், 18 வது ஓவரின் 5வது பந்தை அவர் வீசிய போது, திடீரென கீழே படுத்துவிட்டார். பின் அவரை ஸ்ட்ரெட்சரில் படுக்கவைத்து மிக கவனமாக மைதானத்துக்கு வெளியே அழைத்து சென்றனர். அவருக்கு கீழ் முதுகில் வலி ஏற்பட்டுள்ளதாகவும், அவரால் எழுந்து நிற்க முடிகிறது. எனினும், மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருகிறார்கள் என பிசிசிஐ தனகளது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அவருக்கு பதில் மனிஷ் பாண்டே பீல்டிங் செய்து வருகிறார்.



பண்டியா ஓவரில் மீதமிருந்த ஒரு பந்தை அம்பத்தி ராயுடு வீசினார். கேதார் ஜாதவ் இருப்பதால் 50 ஓவர்கள் வீச தேவையான பந்துவீச்சாளர்கள் இந்தியா வசம் இருக்கிறார்கள். எனினும், பண்டியா இல்லாதது பேட்டிங்கில் பாதிப்பு ஏற்படுத்துமா? அவரால் பேட்டிங் செய்ய முடியுமா என்ற தகவல்கள் தெரியவில்லை. இதை தொடர்ந்து, பிசிசிஐ தற்போது ஹர்திக் பண்டியா நலமுடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது...!