பாகிஸ்தானுடன் மோத தயாராகும் இந்திய கிரிக்கெட் அணி
நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் நடைபெற இருகிறது.
இருநாடுகளுக்கு இடையே நிலவும் மோதல் போக்கு காரணமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு அணிகளும் தனிப்பட்ட முறையிலான தொடர்களில் பங்கேற்பதில்லை. ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் மோதிக் கொள்கின்றன.
மேலும் படிக்க | கபில்தேவுக்கு காரசாரமான பதிலடி கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா
இந்த ஆண்டு ஆசியக்கோப்பை தொடர் ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நடைபெறுகிறது. 20 ஓவர் ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதிக் கொள்ள இருக்கின்றன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான அனுமதியை இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயிடம் இருந்து பெற்றுள்ளது.
ஆசியக்கோப்பை 20 ஓவர் தொடருக்கான தகுதிச் சுற்றுகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. இறுதிப் போட்டி செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறும். கடைசியாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய பாகிஸ்தான் அணி, இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. சுமார் ஓராண்டுக்குப் பிறகு இரு அணிகளும் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர்
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணி ஆதிக்கம் செலுத்துகிறது. இதுவரை இந்திய அணி 6 முறை கோப்பையை வென்றுள்ளது. இலங்கை அணி 5 முறையும், பாகிஸ்தான் அணி இரண்டு முறையும் கோப்பைகளை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் படிக்க | விராட் கோலி ரன்கள் அடிக்காததற்கு ரிக்கி பாண்டிங் தான் காரணமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR